பக்கம்:பூசைப் பாமாலை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் ! நமைஆளும் மாதாடும் பாகத்தன் வாழ்பதிஎன் ?-கோதாட்டி, பத்தரெலாம் பார்மேல் சிவபுரம்போல் கொண்டாடும் உத்தரகோச மங்கை ஊர். என்று வாய்கொள்ளாமல் பாடிய உத்தரகோசமங்கைத் தலத்திலேயே உபதேசம் பெறுவது என்றும், அதற்கு ஏற்ற நாள், கூத்தப்பிரானின் சிறந்த அபிடேக நாளா கிய மார்கழித்திருஆதிரை நாள் என்றும் முடிவு செய் தோம். அதன்படி 1958 டிசம்பர் 25ஆம் நாள் இரவு திருவாதிரைத் தொடக்கத்தில் திருஐந்து எழுத்து உபதேசம் பெறுவதாகத் திட்டம். அங்குச் சென்றவுடன் சிவாச்சாரிய சுவாமிகள், திருவாசகத்தில் ஈடுபாடுடைய நீங்கள் திருவாசக பூசை, இன்று தொடங்கிவிட வேண்டும்” என்று கட்டளை இட்டார்கள். திருவருள்கூடி விட்டது. “சரி” என்று சொன்னேன். 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/16&oldid=836366" இலிருந்து மீள்விக்கப்பட்டது