பக்கம்:பூசைப் பாமாலை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நானும் என் மனைவியும் திருஉத்தரகோச மங்கை இறைவன் திருமுன்னர் சமய தீட்சை பெற்று, திருவாசக பூசை எழுந்தருளச் செய்து கொண்டேன். அது சில நாட் களில் சிவபூசையாக மலர்ந்தது. திருவாசகத்துக்குப் பூசை செய்த நான், திருவாசகம் எந்தக் கடவுளைப் பூசிக் கின்றதோ அந்தக் கடவுளேப் பூசை செய்யும் பேற்றை விரைவில் எய்தியது என் நல்ஊழேயாகும். பூசை தொடங்கியது. உத்தரகோச மங்கையிலா தலின், அங்கு இறைவியோடு எழுந்தருளியிருக்கின்ற இறைவன் திருப்பெயராகிய மங்களேசுவரி உடயை மங்களேசுவர சுவாமி' என்ற திருப்பெயரே என்வழிபடு கடவுளுக்குக் குருநாதரால் அளிக்கப் பெற்றது அன்று தொட்டு, 'திருவாய் பொலியச் சிவாய நம என்று நீறணிந்து மகிழ்ந்து வருகின்றேன். அருச்சனை பாட்டேயாகும்’ என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாய் மலர்ந்து அருளியபடி, பூசையில் உருக்கமான பல பாடல்களைப் பாடி இன்பம் எய்துகின் றேன். இப்பாடல்களேத் தொகுத்து ம லே யா க் க வேண்டும் : அப்படிச் செய்தால் அது பலருக்குப் பயன் 21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/17&oldid=836367" இலிருந்து மீள்விக்கப்பட்டது