பக்கம்:பூசைப் பாமாலை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல் அது. கடையவனேனே' என்பது அப்பாட்டு, அதனைப் பாராயணத்தில் முதலாக ைவ த் தி ரு க் கின்றேன். அதைத் தொடர்ந்து சைவ முறைப்படி பன்னிரண்டு திருமுறைகள். திருமுறைக்கு ஒரு பாடல். எட்டாம் திருமுறை இரண்டு நூல். ஆதலின் திருவாசகத்து ஒன்றும், திருக்கோவையாரில் ஒரு பாடலுமாக எட்டாம் திருமுறைக்கு இரண்டு பாடல்கள். திருவிசைப்பாவுக்கு ஒரு பாடலும், திருப்பல்லாண்டிற்கு ஒரு பாடலுமாக ஒன்பதாம் திருமுறைக்கு இரண்டு பாடல்கள். எனவே திருமுறை பன்னிரண்டிற்குப் பாடல்கள் பதினுன்கு. அதன் பின் சைவம் வளர்த்த, பின்வந்த பெரியவர் களாகிய பட்டினத்தடிகள் பாடல் ஒன்று; தாயுமான சுவாமிகள் பாடல் ஒன்று. அதை அடுத்து, சிவபெருமானின் வடிவத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டும் வரதுங்கராம பாண்டியன் பாடல் ஒன்று. இவற்றேடு சிவ வணக்கம் முடிவு பெறுகின்றது. 23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/19&oldid=836369" இலிருந்து மீள்விக்கப்பட்டது