பக்கம்:பூசைப் பாமாலை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7-ஆவது பாட்டின் பொருள் நமச்சிவாய! உன் இனப் போற்றுகின்றேன் . பாம்புகளே அணிந்தவனே! நான் மயக்க முடையேன். நமச்சிவாய! என உன்னை வணங்குகின்றேன். எனக்குப் போக்கிடம் வேறு இல்லே. உன் ஐந்தெழுத்தையே சொல்லி உன்னைத் துதிக் கின்றேன். என்னே வெளியே தள்ளிவிடாதே. உன் திரு ஐந்தெழுத்தையே சொல்லிச் சொல்லிக் கும்பிடுகின்றேன். வெல்க! வெல்க! வணக்கம், வணக்கம். புயங்கம்: பாம்பு. புகலிடம்: செல்லுமிடம். புறம்: வெளியே. போக்கல்: தள்ளிவிடாதே. கண்டாய்: முன்னிலை அசை. 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/25&oldid=836375" இலிருந்து மீள்விக்கப்பட்டது