பக்கம்:பூசைப் பாமாலை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17-ஆவது பாட்டின் பொருள் குருதி கொட்டும் முடை நாற்றமுடைய தலை ஒட்டைக் கையில் ஏந்தி ஊர் ஊராகப் பிச்சை எற்றுத் திரிவர். உமையவட்கு உடம்பில் ஒறு கூறு அளித்தவர். தானுகப் பாயும் காளேயில் ஏறுகின்ற சிவபெருமான் . நெருப்பு வடிவினர்; தங்கியிருக்கும் கோயில் எது? மான்கள் பாய, அந்த அதிர்ச்சியில் குரங்குகள் வயலுக்கு அணித்தே உள்ள மரத்தில் ஏறிச்சாட, அதனுல் அருகே உள்ள நீர்நிலைகளில் தேன்கொட்ட, மீன் இனங்கள் மோதச் செழுமையான தாமரைப் பூக்கள் இதழ் விரியும் திருவையாறு ஆம் . 38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/46&oldid=836399" இலிருந்து மீள்விக்கப்பட்டது