பக்கம்:பூசைப் பாமாலை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22-ஆவது பாட்டின் பொருள் யார் தந்தை? யார் தாய்? யார் உடன் பிறந்தவர்? யார் மனேவி? யார் மக்கள்? யார் தாங்கள்? வந்த விதம் என்ன? போகின்ற வழி எது? எல்லாம மாயமாகும். இதற்குக் களிப்பு எதுவும் கொள்ள வேண்டாம். நல்ல மனம் உடையீர்! உங்கட்கு ஒன்று சொல்லு கின்றேன். கேளுங்கள், விளங்குகின்ற திங்களும், ஒளியுள்ள பாம்பும், தங்கள் பகையை மறந்து உறவாடும் சடைத் தலையையுடைய எம் தந்தையார் திருப்பெயர் நமச்சிவாய ' என்று இயம்பி எழுகின்றவர் பெரிய வான் உலகத்தை அடைந்து வாழலாம். 48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/56&oldid=836410" இலிருந்து மீள்விக்கப்பட்டது