இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
3-ஆவது பாட்டின் பொருள் பாண்டிய மன்னனின் வெம்மை நோயை நீக்கிய சீர்காழி வேந்தனின் பாதத்துக்கு வணக்கம். கடலின்மீது கல்லேத் தோணியாக்கி அதனை மிதக்கச் செய்து கரைசேர்ந்த பெருமான் தாளுக்கு வணக்கம். என்றும் வாழவல்ல திருநாவலூரில் பிறந்து அருளிய வலிய தொண்டரின் கழலுக்கு வணக்கம். ஊழிநாள் வரை, பெருகிய புகழ்வாய்ந்த திருவாதவூரர் திருவடிகளுக்கு வணக்கம். பூமியர்கோன்: பாண்டியன் . வெப்பு: சுரநோய், புகலியர் கோன்: திருஞானசம்பந்தர், ஆழி: கடல், மிதப்பு: தெப்பம். பிரான்: திருநாவுக்கரசர், வன்தொண்டர், சுந்தரமூர்த்திகள். திருவாதவூரர்: மாணிக்கவாசகர். கழல், அடி, பதம், தாள், காலேக்குறிக்கும், ஒரு பொருட் சொற்கள், கழல், அடி, பதம், என முதல் முன்று இடத்தும் சொல்வி, மணிவாசகரைக் கூறுங்கால், "திருத்தாள்’ என்று செப்புவது சிறந்த அமைப்பு. معر §