பக்கம்:பூநாகம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரையும் இறையும்

காற்றில் ஏறி விண்ணைச் சாடும் அந்தக் காகம், இப் போது மண்ணில் கிடந்தது வரிசை வரிசையாய் இருந்த கடைகளில் ஓர் இரும்புக் கடைக்கு அருகே வெட்ட வெளியில் ஓர் ஒரமாய்ப் போடப்பட்டுள்ள இரும்புச் சுருள் கம்பிகளுக் கும், சரளைக்கல் குவியலு க்கும் இடையே பள்ளத்தாக்கு மாதிரியான இடத்தில் தலை மறைவாய்”த் தவித்தது.

தள்ளாடும் முதுமையில், சதிராடும் இளமையும், அல்லா டும் அலுவலகத்தில் ஆட்டம் போட்ட கல்லூரியும, நமக்கு விலகி நின்று வேடிக்கை காட்டுவது போல் அந்தக் காக் கைக்கும் ஓர் அனுபவம், பட்டறியும் அனுபவம். அதன் அலகிற்குள் ஆயிரக்கணக்கில் சிக்கக்கூடிய தட்டாரப் பூச்சி களில் ஒன்று, அதோ அந்தக் காக்கையின் தலைக்கு மேல் வட்டமிட்டுத் திரிகிறது. அதன் இறக்கை விரிப்பே இதற்கு ஒரு விஸ்வரூப மாயையாய்த் தோன றுகிறது. அதன் கால் நகங்களுக்குள் சிக்கித் தவிக்கும் வெட்டுக் கிளிகளில் ஒர் அற்பக்கிளி, அந்தக் காகம் கொத்தும் தொலைவிலேயே துள்ளிக் குதிக்கிறது. ஆனாலும் அந்தக் காகம், மேலே பறக்கும் பூச்சியையும், கீழே திரியும் வெட்டுக்கிளியையும்

1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/10&oldid=600466" இலிருந்து மீள்விக்கப்பட்டது