பக்கம்:பூநாகம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 91

'நாம யோசிக்க வேண்டியது மாநாட்டின் விவாதம் பற்றித்தான். மாநாட்டிற்கான பணிகளைப் பற்றி இல்ல. அதோட சிக்கனத்துக்கான, இன்றைய செலவு நாளைய நாட்டின் சேமிப்பு. நாம விருந்தோம்பல் செய்யுறவங்க. பாவம். பிள்ள குட்டியை விட்டுட்டு பஸ்ட் கிளாசில் வருகிற சகாக்களை நாம கவனிக்காட்டி யாரு கவனிப்பாங்க... அவங் க வருக்கில்லாத ஏளி ரூம் இருந்தென ன, போயென்ன? சிக்கனத்துக்கான உடனடிச் செலவுக்குப் பயந்தால் நம் எதிர் காலம் ஊதாரிக் காலமாயிடும்.’’

ஜாயிண்ட் டைரக்டரால் இதுவரை ஓரம் கட்டப்பட்ட அந்த ஆண் டெப்டி டைரக்டர் பெருமிதமாகப் பேசியதை, முகர்வது போல் மூக்கை உறிஞ்சினார். இறுதியாய் ஆலோசனைக் கூட்டம் விமான நிலையத்திற்கும், ரயில்வே நிலையத்திற்கும், விருந்தினர் விடுதிக்குமாய் சிதறியது.

本 蕾 事

பிற்பகல் மூன்று மணி அளவில், தென்னக அரசு அதிகாரிகளின் நிர்வாகச் சிக்கன மாநாடு துவங்கி விட்டது. அந்த மாநாட்டின் பெயர்ப் பலகையை பல்வேறு வண்ண பல்புகள் சிக்கனமில்லாமல் மின்னி மின்னிக் கட்டின. மேடையில் முதலில் உள்ள இரண்டு நாற்காலிகளில் ஜாயிண்ட் செகரட்டரி எஸ்.பி.லாலும், இயக்குநர் திலகம், (அதாவது டைரக்டர் ஜெனரல்) சுரேஷ் குப்தாவும் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார்கள். அந்த இரண்டு நாற்காலிகளுக்கும் பின்னால் போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியில், ராமானுஜம் நெளிந்து கொண்டிருந்தார். முன்னால் இருப்பவர்கள் இரண்டு பேருமே அவரது பதவியின் தலைவிதியை எழுது கிறவர்கள். ஏற்கனவே அவர்கள் கீரியும், பாம்பும் மாதிரி. இவர்களில் ஒருவருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மற்றவர் கடித்து விடுவார். என்ன செய்யலாம் என்று ராமானுஜம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/100&oldid=600558" இலிருந்து மீள்விக்கப்பட்டது