பக்கம்:பூநாகம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 93

'ஆமா ஸார்... காஞ்சிபுரம் போய் அரசாங்கத்தோட சிக்கனம் வெற்றி பெற சங்கராச்சாரியார் சுவாமிகள் கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு அப்படியே கோயில் குளங்களையும் பார்த்துட்டு திருப்பதி போய் சிக்கனத்தைப் பத்தி தெரிஞ்சுக் கிட்டு வரலாம். இன்னைக்கே போயிடலாம் ஸார்.’’

இலாகா தலைவரான டைரக்டர் ஜெனரல் பாம்புக் காதனான ஜாயிண்ட் செகரட்டரி, தன்னோடு ஒட்டிக் கொண்டதில் அதிருப்திப்பட்டார். அந்த அதிருப்தியை மறைக்கும் வகையில் மேடை முன்னால் போனார். பொதுப் படையாகக் கேட்டார்.

'இந்த சிக்கன மாநாட்டில் ஆக்க பூர்வமான யோசனை கள் இருந்தால் யாரும் சொல்லலாம். ஆனாலும் அது: சிக்கனத்தை சீர்படுத்துறதா மட்டுமே இருக்கனும் ஓ.கே. ஒன் பை ஒன்...”

ஆடியன்ஸ்-அதிகாரிகள், ஒருவர் ஒருவராய் எழுந்து, சிக்கனத்திற்கான சீரிய யோசனைகளைச் சொன்னார்கள்.

இனிமே சிக்கணமே நமது உயிர் மூச்சு-இதைக்கடை பிடிக்க உங்களோட கெய்டன்ஸ் அவசியம். அதனால, ஹெட் குவார்ட்டர்ஸோடு சிக்கனம் பற்றி தெரிவிக்கவும், தெரிந்து கொள்ளவும் ஒவ்வொரு பிராஞ்ச் ஆபீஸிலயும் ஒரு பேக்ஸ் மிஷன் வைக்கனும்... அதை கட்டிக்காக்க ஏளியும் இருக்கணும்...”

'சிக்கனத்தைக் கண்காணிக்க ஒவ்வொரு ஆபீஸிலேயும் ஒரு கம்ப்யூட்டர் வைக்கனும். இந்த கம்ப்யூட்டரை தேசிய சர்க்யூட்ல இணைக்கணும்.’’

'ஊழியர்கள் எப்படி சிக்கன நடவடிக்கையில் ஈடுபட்டி ருக்காங்க என்பதை கண்காணிக்க இனிமேல் புரோகிராம் ஆபீஸர்களுக்கும் வீட்டுக்கு டெலிபோன் கொடுக்கணும்.’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/102&oldid=600560" இலிருந்து மீள்விக்கப்பட்டது