பக்கம்:பூநாகம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சுண்டைக்காய் சுமப்பவர்கள்

இயக்குகர் திலகம், அவர்கள் சொன்னதை ஒப்புக் கொண்டது போல், தலையாட்டினார். பிறகு ஜாயிண்ட் செகரட்டரியை விட தான் பெரிது என்பதைக் காட்டும் வகையில் பேசினார்

'உங்க ஆலோசனைகளை செயல்படுத்துவோம். எனக் கென்னவோ இந்த மாதிரி மூச்சு முட்டுற அறையில் இந்த முக்கிய பிரச்சினையை விவாதிக்கக்கூடாது என்று நினைக் கிறேன். அதனால, நாளைக்கு நீங்க மகாபலிபுரம் போய் நல்ல சுற்றுப்புறச் சூழலில் சிக்கனத்தைப் பற்றி தெளிவான முடிவுக்கு வரணும். இதுக்காக ஐந்து உலக்ஸ் பஸ்களை அரேஞ் செய்யும்படி ஜாயிண்ட் டைரக்டருக்கு இப்பவே இங் கேயே உத்தரவிடறேன்.’’

ஆடியன் ஸ் அதிகாரிகள், பலமாக கைதட்டினார்கள். இந்த கைதட்டலுக்கு மத்தியில், பின் வரிசையில் உட்கார்ந்: திருந்த நமது அஸிஸ்டெண்ட் டைரக்டர் சுந்தரம், முன்வரி சைக்கு வந்து இன்னொரு யோசனை சொன்னார்.

மகாபலிபுரத்துக்குப் பக்கத்திலேயே திருக்கழுக்குன்றம் என்ற திருத்தலம் இருக்குது. அங்கே ஒரு மகா புருஷர், கழுகு வடிவத்தில் அந்த கோயிலுக்கு தினமும் சென்று குருக் கள் கொடுக்கிற எண்ணெயை அலகால் தேய்த்து, அவர் நீட்டுகிற பஞ்சாமிர்தத்தை உண்டுவிட்டு போகிறார். இந்த திருக்கழுகு பஞ்சுவாலிட்டிக்கு பேர் போனது. இதையும் நமது அதிகாரிகள் அங்க போய் பார்க்கணும். இதனால, லேட்டா வந்து பழக்கப்பட்ட நமக்கு ஒரு இன்ஸ் ரேஷன கிடைக்கும். இந்த இன் ஸ்பிரேஷ ைஸ் சிக்கனத்தை சிக் க னப் பிடித்துக் கொள்ளலாம். பஞ்சுவாலிட்டியை பற்றிக் கொள்ளலாம்.’’

கிண்டலாகச் சொன்னதை, சீரியஸாக எடுத்துக் கொண்ட கூட்டம், மீண்டும் பலமாகக் கைதட்டியது. இப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/103&oldid=600561" இலிருந்து மீள்விக்கப்பட்டது