பக்கம்:பூநாகம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 95

போது ஜாயிண்ட் செகரட்டரி தான் டைரக்டர் ஜெனரலுக்கு இளைத்தவரில்லை என்பதைக் காட்டும் வகையில், மைக் கிற்கு வந்து சிறிது கடுகடுப்பாக உபதேசித்தார்.

நான் சொல்றதை நீங்க எல்லோரும் கண்டிப்பாக கடைப் பிடிக்கணும். இனிமேல் உங்க டிரைவர்களுக்கு ஒட்டி கொடுக்கப்படாது. கிளாஸ் போர் பியூன்களுக்கும் நோ ஒட்டி. இந்த ரெண்டு தரப்பையும் ஷிப்ட் டுட்டியில் போடுங்க. விடுமுறை நாள்ல வேலை பார்க்கிறதுக்கு, இன் னொரு வேலை நாளில் லீவு கொடுங்க... இனிமே இவங்க ளுக்கு ஒ.டி. என்ற பேச்சே இல்லை. அண்டர்ஸ்டாண்ட்...? அதோட பெட்ரோல்ல சிக்கனம் வேணும். கூடுமானவரை ஆபீஸ் காருங்களை அதிகமாப் பயன்படுத்தக்கூடாது. நோ... பெர்ஷனல் யூஸ்!’’

ஜாயிண்ட் செகரட்டரி பேசி முடித்துவிட்டு, தமது இருக் கையில் உட்கார்ந்தார். அவர் பிரமாதமாய் பேசியதாய், டைரக்டர் ஜெனரல் அவருக்கு கைகொடுத்தபோது, இரு வரின் தோள்களுக்கும் இடையில் மூக்கை நீட்டிக் கொண்டு ஜாயிண்ட் டைரக்டர் ராமானுஜம் குழைவாய் பேசினார். பக்கத்தில் தலையை சொரிந்துகொண்டு நிற் கிற ஒருவரை சுட்டிக்காட்டியபடியே பேசினார்.

'ஸார். ஸார். (இரண்டு பேராச்சே. அதனால ரெண்டு ஸார்), காஞ்சிபுரம் வழியாக திருப்பதி போறதுக்கு கார் ரெடியா இருக்கு. அதோ நிக்காரே அவர் ஸ்பேர் கார்ல வந்து எல்லா ஏற்பாடுகளையும் கவனிச்சுக்குவார்... புறப்பட லாம் ஸார். இருட்டிடப் போகுது.’’

§§ §§ §§

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/104&oldid=600562" இலிருந்து மீள்விக்கப்பட்டது