பக்கம்:பூநாகம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூநாகம்

மாடியில் நின்றவர்களைப் பார்த்து உற்சாகமாகக் கையாட்டிவிட்டு டிரைவர் இருக்கையில் உட்கார்ந்தான் ரவிக்குமார். அவனையும், மேலே நின்ற தன் பெற்றோரை யும் அண்ணன், தம்பி தங்கைகளையும், அவனது பெற்றோ ரையும் கூச்சத்தோடு பார்த்தாள் மல்லிகா. அந்த கார் கதவு, அவன் கைபடாமலே தானாகத் திறப்பதைப் பார்த்து விட்டு, கூச்சப்பட்ட பார்வையை ஆச்சரியமாக்கினாள. அதற்குள் ரவிக்குமார், 'கமான்.’’ என்று சொன்னபடியே அவளை நோக்கி லேசாகக் கையை நீட்டி, பிறகு அதற்கு இன்னும் உரிமை வரவில்லை என்பது போல் மடக்கிக் கொண்டான்.

அவள் மீண்டும் மாடிக்காரர்களைத் தயக்கத்தோடு பார்த்தபோது, மேலே நின்ற அவள் தந்தை பேராசிரியர் பெருமாள், இதுல என்னம்மா இருக்குது? ஏறிக்கோ .. ஐம்பதாண்டுக்கு மேல குடும்பம் நடத்தறதுக்கு அரை நாள் பரீட்சை எழுதறதுல தப்பில்லையே.’’ என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/105&oldid=600563" இலிருந்து மீள்விக்கப்பட்டது