பக்கம்:பூநாகம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 97

மல்லிகா அந்த காரில் ஏறிக் கொண்டதும், அதன் கதவு தானாக மூடியது. இறக்கி வைக்கப்பட்ட ஜன்னல் கண்ணாடி கள் முழுமையாக மூடிக்கொண்டு, அந்த காரையே ஒரு தனி உலகமாகக் காட்டியது. இதுவரை அவள் பார்த்தறியாத கார். இருக்கைகள் கூட வெல்வெட் மெத்தைகளாக மின்னின. அதில் உட்கார்ந்தவுடனேயே மயிலிறகில் உடகார்ந்தது போன்ற சுகம்.

'இப்போதான் இந்த காரைப் புதுசா மார்க்கெட்ஸ் விட றோம். கதவு, கண்ணாடிகளை ஆட்டோமாடிக்கா திறக்க லாம். மூடலாம். இதோ, இந்த ஸ்டியரிங்கைக்கூட நம்ம உயரத்துக்கு ஏற்றபடி அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். nட் டைக்கூட முன்னாலும் இழுத்துப் போட்டுக்கலாம் ’’ என்று அவன் சொல்லிவிட்டு ஏ.ஸி.யைப் போட்டான்.

அந்த கார், அந்தத் தார்ச்சாலையில் குண்டு குழிகளை யெல்லாம் மறைத்துக்கொண்டு, அந்தத் தெருவுக்கே ஒரு தனிக் கம்பீரம் கொடுத்தபடி மெள்ள மெள்ள நகர்ந்து ஒடத் துவங்கியது. இருவரும் ஒருவரை யொருவர் ஆழம பார்ப்பது போல் பார்த்துக் கொண்டார்கள். வாயில் புட ைபயிலும் அவள் அசததலாய்ப் பார்த்த அந்தப் பார்வை அவனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவன் பார்வையைத தாள முடியாது அவள் அங்குமிங்குமாய் நெளிவதைப் பார்த்து விட்டு, அவளை கார் கண்ணாடியில் பார்த்தான அவன்.

கட்டிய புடவையைப் போலவே, எளிமைக்கும் கவர்ச் சிக்கும் இடைப்பட்ட தோற்றம். அவள் உள்ளடக்கத்துக்குச் செவ்வளிப் பூவால் உருவம் கொடுத்தது போன்ற நேர்த்தி. ஏதோ ஒன்று ஒளியோ அல்லது அதுபோலான ஒன றோ அவள் உடயபு முழுவதிலுமிருந்து ஜொலித்துக் கொண் டிருந்தது. முன் பற்களில் கிளிப் போட்ட அடையாளங் களையும், அவளது சிறிது அதிகப்பட்ட உயரத்தையும் வேண்டுமானால் குறைகளாக எடுத்துக் கொள்ளலாம் எனறு நினைத்தான்.

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/106&oldid=600564" இலிருந்து மீள்விக்கப்பட்டது