பக்கம்:பூநாகம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 இரையும் இறையும்

இரையாகப் பார்க்காமல், இறையாகவே பார்க்கிறது. வெள் ளைக் கொண்டையும் கருப்பு மேனியும் முரண்பாடாக, அந்த முரண்பாடே ஓர் அழகாகவும் தோன்ற, கால்களை அடி வயிற்றில் இடுக்கி வைத்துக்கொண்டு, ஆகாயத்தைத் துழாவி, இறக்கைகளை மேலும் கீழுமாய் அடித்தடித்து, அதன் களைப்பிலோ அல்லது உழைப்பின் அனுபவிப் பாகவோ அந்த இறக்கைகளை ஆடாமல் அசையாமல் விரிய வைத்து அந்தரத்திலேயே சுவாசனம் செய்யும் அந்தக் காகம் இப்போது பழைய நினைவுகளை நினைத்துத் தன் னையே பரிதாபமாகப் பார்ப்பது போல் முகத்தைச் சுருட்டி வைத்துக் கொண்டது. பத்து நிமிடத்திற்கு முன்புவரை உயிரோட்டத்திற்கு இறக்கை கட்டி விட்டதுபோல் வெட்ட வெளியில் ஒரு கருப்புக் கட்டியாய் சுற்றி வந்த இந்தப் பறவை ஜீவன் சாய்ந்து கிடந்தது. தென்னை மரத்தில் முறிந்தும் முறியாமலும் எப்போது வேண்டுமானாலும் அற்றுப் போக லாம் என்பது மாதிரி அந்த மரத்தில் தொங்கிக் கிடக்கும் பச்சை ஓலைபோல, அதன் ஒரு பக்கத்து இறக்கை சரிந்து கிடந்தது.

இவ்வளவுக்கும், அந்தக் காகம் எச்சரிக்கையோடுதான் செயல்பட்டது. அந்த இரும்புக் கம்பிச் சுருளுக்கு அப்பால் கிடந்த, ஒரு போண்டாத்துண்டைச் சர்வ ஜாக்கிரதையாகத் தான் வட்டமிட்டது. அதன் அருகே உள்ள ஒரு மணல் குவி யலில் பறக்கும் யத்தனத்துடன் தான் அதைப் பார்த்தது. பிறகு கர்ப்பிணிப் பெண் போல், பையப் பைய நடந்து, அந்த எச்சில் போண்டா எங்கேயும் போய்விடக் கூடாது என்று நினைப்பதுபோல் அதற்கு இரண்டு கால்களாலும் வேலி யிட்டுக் கொண்டே மீண்டும் ஒருமுறை சுற்றுமுற்றும் பார்த்து விட்டே, அதன் வாயலகு கொத்தத் துணிந்தபோது, அதன் ஒற்றைக் கண் கடை முன்னால் நின்ற மனிதக் காலடிகளை அளவெடுத்துக் கொண்டுதான் இருந்தது. இதற்குள் கண் ணுக்கு அப்பால் தெரிந்த ஒரு சொறி நாய் வருவதற்குள், அந்தப் போண்டாவைக் கொத்திக் கொண்டு அப்படியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/11&oldid=600467" இலிருந்து மீள்விக்கப்பட்டது