பக்கம்:பூநாகம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பூநாகம்

ரிங்கைப் பிடித்துக்கொண்டு, இடது கையால் அவள் தோளில் *சபாஷ் . சபாஷ்’’ என்று சொன்னபடி பட்டும் படாமலும் தட்டிவிட்டான்.

கார் மீண்டும் ஒரு மும்முனைக்கு வந்தது. அவன் கேட் டான். மகாபலிபுரம் வரைக்கும் வண்டியை விடலாமா??அவள் தலையாட்டினாள். அப்படி ஆட்டும்போது அவள் தனக்கே சொந்தம் என்பது போலவும், அவன் தன் பக்கம் வரவேண்டும் போலவும் இருந்தது.

அந்த கார் பத்து கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்திருக் கும். காவல்துறையினர் பத்துப் பதினைந்து பேர் தாங்களே சாலை மறியலில் ஈடுபட்டது போல் சாலையின் குறுக்கே மனிதச் சங்கிலியாக நின்றனர். ஒரு காக்கி யூனிஃபாரக் காரர், அந்த காரின் முன்னால் வந்து நின்றார். ரவிக்குமார் ஒரு பட்டனை அழுத்தி வலது பக்க கண்ணாடி ஜன்னலை கீழே இறக்கினான, அப்போது அதிகாரி போல் தோன்றிய இன்னொரு காக்கிக்காரர், உள்ளே எட்டிப் பார்த்து மிடுக் காகக் கேட்டார்.

நீங்க யாரு? இவங்க யாரு?’’

மொதல்ல எதுக்காக எங்களை நிறுத்தினிங்க... அதைச் சொல்லுங்க ...”*

'உங்ககிட்ட சொல்லணும்னு அவசியமில்லே...'

'என்ன சார் இது. அடாவடியாய்ப் பேசுறீங்க...நாங்க இந்த நாட்டோட பிரஜைங்க ... வோட்டுப் போட்டவங்க. எங்களை எதுக்காக நிறுத்துனிங்கன்னு தெரியனும்.இது எங்கள் அடிப்படை உரிமைகளைப் பறிக்கிற குற்றம். புரி யுதா.. ???

போங்க சார்... போங்க. இந்தாப்பா, ரோட்டை விட் டுத் தள்ளி நில்லு. அவங்க போகட்டும்.’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/111&oldid=600569" இலிருந்து மீள்விக்கப்பட்டது