பக்கம்:பூநாகம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 103

இத்தகைய தமிழ்ப் பண்பாட்டுக் காரியங்களுக்குப் பழக் கப்பட்டுப் போன மல்லிகா, வண்டியை எடுக்கும்படி ரவிக் குமாரின் தோளில் தட்டினாள். தட்டிய கையை தட்டப் பட்ட இடத்திலேயே வைத்துக் கொண்டாள். அவளது ஆண் சகாக்கள் பலர் போலீஸ்” என்றதும் புறமுதுகிடுவதைப் பார்த்தவளுக்கு அவன் அப்படி வீராவேசமாகவும், எதை யும் எதிர்கொள்ளத் தயாரான தோரணையிலும் பேசியவிதத் தில் அவள் அசந்துவிட்டாள். இப்போது அவன் வித்தியாச மாணவனாக மட்டும் தெரியவில்ல. அவள் கற்பனையில் தனது வருங்காலக் கணவன் எப்படி இருக்க வேண்டுமென்று கோலப்புள்ளிகள் போட்டு கோலமிடாமல் வைத்திருந்ததற்கு, இப்போது முழு வடிவம் கிடைத்தது போல் தோன்றியது. அவன் தனது தோளில்பட்ட அவள் கையைப் பிடித்து அந்த விரல்களை நெருடி விட்டுக் கொண்டே சிறிது உணர்ச்சி வயப்பட்டுப் பேசினான்.

நீங்க என்னைக் கல்யாணம் பண்ணினால் நான் அதிர்ஷ்டக்காரன். நமக்குக் கல்யாணம் நடந்த பிறகு, சும்மா ஒரு வாதத்துக்குத்தான் சொல்றேன். நீங்க வேலையை விட வேண்டியதிருக்கும். சரியா???

'ஒரு பெண்ணுக்கு வேலை என்கிறது பணம் சம்பந்தப் பட்டது மட்டுமல்ல. அதுல ஒரு ஆத்ம திருப்தியும் இருக்கு. டேல்லியில் எனக்கு ஒரு வேலை கிடைக்காமலா போகும்? அதோட நீங்களே இங்கே வேலையை மாத்திட்டு வந்தால் என் வேலை பிழைக்குமே???

'சரி. அதைப் பற்றியெல்லாம் அப்புறமா பேசிக் கலாம். இப்போ கொள்கை முடிவு எடுத்திருக்கோம் . அதாவது, நாம் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். έπήθιμιτ? **

அவள் சரி’ என்று சொல்லவில்லை. அவன் தோளில் சரிந்து விழுந்தாள். அவன் காரை ஆகாயத்தில் விடுவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/112&oldid=600570" இலிருந்து மீள்விக்கப்பட்டது