பக்கம்:பூநாகம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 105

காட்டே ஜுக்கு வந்ததும் வெளியே அவன் விரல்பட, உள்ளே ஒரு சங்கீதம் எழும்பியது. ஓரிரு நிமிடங்களில் கதவு திறக்கப் பட்டது. திறந்தவருக்கு நாற்பத்தைந்து வயது இருக்கும். அழகான தோற்றம். வெட்டும் கண்கள், ஆக்கிரமிக்கும் பார்வை. அவனைப பார்த்து ஆச்சரியப்பட்டது போல் கண் உயர்த்தி, அடடே... நீயாப்பா? இந்நேரம் ஏதோ ஒரு வீட்டில பொண்ணு பார்க்கிற சாக்கில் சொஜ்ஜியும் பஜ்ஜியும் தின் னுட்டு இருக்கனுமே...!’’ என்றார்.

ரவிக்குமார், மல்லிகாவை அவருக்கு அறிமுகம், செய்து வைத்தான். அவர், அவளை அங்கீகரித்துக் கொண்டே *ராஜா நாற்காலி மாதி ரியான, தலைக்கு மேல் உயர்ந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து எதிரே உள்ள சோபா-செட்டில் அவர்களையும் உட்காரச் சொன்னார். அவன், அவரிடம். பெண் பார்க்கும் படலம், அதே சாக்கில் பிக்னிக் படலமான தைக் கிழ்ப்படியும் குரலோடு விவரித்தான். அவர் சிரித்துக் கொண்டார், பிறகு, அவளைப் பார்த்து யு ஆர் லக்கி’’ என்றார். உடனே, மல்லிகாவும் ஹி இஸ் ஆல்ஸோ லக்கி’ என்றாள். அவர் கடகட வென்று சிரித்தார். அவளைப் பார்த்து ரசித்தார். பேச்சு எங்கெல்லாமோ போனது. அத்தனை உலக விவகாரங்களையும் அவர் சொல்லச் சொல்ல அவற்றில் உள்ள தப்புகளையும் பொருட் படுத்தாமல் அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இறுதி யில் மல்லிகா எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் அவரிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தாள்.

  • அங்கிள் அங்கிள். இவரை மெட்ராஸுக்கு மாற்றிப் போடுங்க அங்கிள். அதனாலே நான் கஷ்டப்பட்டு தேடிக் கிட்ட அசிஸ்டெண்ட் புரொபசர் வேலையைக் காப்பாத்திக் கலாம். உங்க மகள் மாதிரி எனக்கு ’’

நோ பிஸினஸ் டாக் ப்ளீஸ்...??

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/114&oldid=600572" இலிருந்து மீள்விக்கப்பட்டது