பக்கம்:பூநாகம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 பூநாகம்

எம்.டி.யின் குரலே மாறி விட்டது. சிறிது மெளனத்துக்கு பிறகு, ரவிக்குமாரிடம் அவனுக்கு விடை தெரியாத கேள்வி களாகக் கேட்டுத் திணறடித்தார். பிறகு எழுந்து நின்றார். ரவிக்குமாரும் மல்லிகாவும் வெளியே வந்தார்கள். அவன் உடம்பெல்லாம் ஆடியது. அவளைச் செல்லமாகக் கண்டித் தான.

  • காரியத்தை கெடுத்துட்டியே மல்லி... எங்க எம்.டி.க்கு மனசிலே பெரிய மன்மதன்னு நெணைப்பு. எல்லாப் பெண் னுங்களும் தனக்காக ஏங்குறதா ஒரு எண்ணம். அப்படிப் பட்டவரைப் போய் அங்கிள். அப்பா...?ன்னு அழைச் சிட்டியே. சார். சார்’னு ஒரு இழுப்புப் போட்டுக் குழைந் திருக்க வேண்டாமா? நட. ஏய் மல்லி. நீ ஏன் அப்படி ஒடுறே..???

'உங்ககிட்ட சொல்றது அநாவசியம்; ஆனாலும் சொல் றேன். நான் பல்லவன் பஸ்ஸைப் பிடிக்கணும். வர்றேன். என்னை நீங்க மட்டும்தான் உங்களுக்காக மட்டும்தான் கல்யாணம் செய்துக்கப் போறதா நினைச்சேன்.’’

அவன், சட்டையிலிருந்து விழப்போன ரோஜாப்பூவை

யதேச்சையாய்த் தாங்கிப் பிடிக்கப் போனான்... ஆனால் அந்தப் பூ, அவன் சட்டையைச் சட்டை செய்யவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/115&oldid=600573" இலிருந்து மீள்விக்கப்பட்டது