பக்கம்:பூநாகம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுக்காத மாடி

அந்த மூவரும் ஆட்டோவில் இருந்து விடுபட்டார்கள். ஆட்டோ, கொஞ்சே கொஞ்சம் நில்லுப்பா என்று கலைச் செல்வி கான்பூர் தமிழில்’ கேட்டாள் ரன்னிங் டயம், சீக் கிரமாய் வாங்கோ’ என்றான் டிரைவர்.

கலையழகு வாய்ந்த கட்டிடங்கள் நிமிர்ந்து நின்ற அந் தத் தெருவைப் பார்ப்பதற்கே பெருமிதமாக இருந்தது அழகம் மாவிற்கு. இந்தத் தெருவில் நிலம் வாங்கிப் போட்டதற்காக கணவனைப் பெருமை பொங்கப் பார்த்தாள். கலைச்செல்வி வியந்தபடி தந்தையின் கையைப் பற்றிக் குலுக்கி கங்கி ராட்ஸ் டாடி பீட்டிபுல் லொகேஷன்' என்றாள்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் முத்துவேல் நின்றார். மேலும் கீழுமாய் பார்த்தார். சந்தேகமில்லை அது அவரது இடந் தான். தெற்குப் பக்கம் அதே சக்தி வித்யாலயா, இரண்டு வருஷத்துக்கு முன்பு ஒடு போட்ட கட்டிடம். இப்போது காங்கிரீட் மாளிகையாகி விட்டது.

முத்துவேல் தலையை ஆட்டி ஆட்டிப் பார்த்தார். அவர் வாங்கிப் போட்ட இரண்டு கிரவுண்டு இடத்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/116&oldid=600574" இலிருந்து மீள்விக்கப்பட்டது