பக்கம்:பூநாகம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 அடுக்காத மாடி

சாலையில் மூன்றடியையும் ஆக்கிரமித்து "அன்பு இல்லங்கள்’ என்ற பிளாஸ்டிக் பெயர் ஒட்டப்பட்ட காம்பவுண்ட் சுவரைப் பார்த்தார். ஆறடுக்கு மாடி. ஒரு அரண்மனையின் கம்பீரம். பத்துப் பதினைந்து கார்கள், ஸ்கூட்டர்கள், வாசலில் கூர்க்கா. என்ன இதெல்லாம்.

அதிர்ச்சியடைந்து கீழே விழப் போனவரை தாயும் மகளும் தாங்கிப் பிடித்தார்கள். அழகம்மா, என்னங்க.. என்னங்க’ என்று அரற்றியபடியே அங்குமிங்குமாய் சுற்றிய போது, சக்தி வித்யாலயா சண்முகம், அவரைப் பார்த்துச் சிரித்தபடி வந்தார். முத்துவேல் மனைவியையும் மகளையும் உதறிப் போட்டுவிட்டு அவரிடம் ஓடினார்.

'ஸார். ஸார். அது என்னோட நிலந்தானே....???

'ஒரு காலத்துல. அப்புறம் அதை சேட்டுக்கு வித்துட் டீங்க போலிருககே. என்ன ரேட்டுக்கு கொடுத்தீங்க, என் கிட்ட சொல்லியிருந்தா நானே நல்ல ரேட்டுக்கு வாங்கியிருப். பேனே. 2

முத்துவேல் தலைக்குள் ஏதோ ஒன்று உட்கார்ந்து தலையோட்டை பிய்த்தெறிவது போல் பிரமை, அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தை தானும் மகளும் மனைவியும் கல்தூண்களாய் தலையில் வைத்து பாரம் தாங்காமல் பரித விப்பது போன்ற உடல்வலி. அழகம்மா தான் முன்பின் பார்த்திராத சக்தி வித்யாலயாரைப் பார்த்து என்ன ஸார் சொல்லுங்க” என்று பதறியடித்துக் கேட்டபோது அந்த ஆசாமி லார் இந்த இடத்தை அந்த சேட்டுக்கு வித்துட் டாருன்னு நெனச்சேன். அவர் என்னடான்னா விக்கலன்னு சொல்றார்.

முத்துவேல் சிறிது சுயத்திற்கு வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/117&oldid=600575" இலிருந்து மீள்விக்கப்பட்டது