பக்கம்:பூநாகம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 109

'நான் விக்கல ஸார். விக்கவே இல்ல ஸார். ஒங்ககிட்டக் கூட என் அட்ரஸ்க் கொடுத்தேனே ஸார். ஒரு வரி எழுதிப் போட்டிருக்கலாமே ஸார்.’

'வார்த்தய வியர்த்தமா கொட்டாதீங்க ஸார்.யார் வீடு கட்டினா எனக்கு என்ன? ஏதோ எனக்கு பவர் ஆப் அட் டர்னி எழுதிக் கொடுத்தது மாதிரி அதட்டுறீங்க...???

'அதட்டல ஸார். அதட்டல. ஒரு ஆறுதலுக்காகக் கேட்டார்.’’

‘சரி...சரி. அதோ ஷெட்டு முழுசயும் அடச்சிட்டு நிற்கிற கான்டசாவுல ஏறப்போறான் பாருங்க. அவன்தான் சேட்டு. அவங்கிட்டே போய்க் கேளுங்க. ஆனால் நான் சொன் னேன்னு சொல்லாதீங்க. அவனுக்கு அ டி யா ளு ங் க அதிகம்.’’

சக்தி வித்யாலயர் சேட்டுக்கோ அவரது அடியாள் களுக்கோ அஞ்சுபவரல்ல. ஆனாலும் வீட்டுக்குள் போய் தன்னை மறைத்துக் கொண்டார். அந்த சேட்டு அப்பப்ப கார்ல லிப்ட் கொடுக்கிறான். அதோட இந்த வாத்திப் பசங்க வேற....வம்பு பண்றாங்க...சேட்டுக்குப் பிரண்டாய் இருந்தால் தான் லேடி டீச்சருங்களாவது பயப்படுவாளுங்க. சேட்டு கெட்டிக்காரந்தான். எங்கேயோ இருந்து ஒரு பிச்சைக்கார னாய் வந்து ஒரு ராசாவாயிட்டான். பலர பிச்சைக்காரங் கனாகவும் ஆக்கிட்டன். எம்.பி.யும் வேற ஆகப் போறானாம்.

முத்துவேலர் குடும்பத்துடன் கேட் பக்கம் வந்தபோது கூர்க்கா வழி விட்டான். இன்னும் பாக்கியிருக்கும் பிளாட் களில் ஒன்றை வாங்க வந்திருப்பதாக நினைத்து, சேட்டு சொல்லிக் கொடுத்தது போல் தலையைக் குனிந்து அதையே கை போலாக்கி ஒரு சல்யூட் அடித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/118&oldid=600576" இலிருந்து மீள்விக்கப்பட்டது