பக்கம்:பூநாகம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 10 அடுக்காத மாடி

முத்துவேல் முக்கியடித்து ஓடினார். காரில் ஏறப் போன சேட்டின் குறுக்கே கையை நீட்டியபடியே அவனை வெறித்துப் பார்த்தார். தேவிலால் மாதிரியான தோற்றம். ஆனால் வயிறு மட்டும் உடம்பின் விகிதாச்சாரத்திற்கு அதிக மாக விம்மியிருந்தது. சேட் அவரைப் பார்த்ததும் அவசரத் தனமான நிதானத்துடன் விளக்கமளித்தான்.

அதோ ரிஜிஸ்தரோட நிற்கிறார் பாருங்க. அவர்கிட்டே எல்லா விவரமும் கேளுங்க. நாலு பிளாட்டையும் நல்லா பாருங்கோ. நான் அரை மணி நேரத்துக்குள்ளே வந்துடு றேன். அட்வான்ஸ் கொண்டு வந்திருக்கீங்களா?’’

முத்துவேல் விண்ணதிர மண்ணதிரக் கத்தினார்.

‘அடே. பாவி. இது என்னோட நிலம்டா... அஞ்சு வருஷத்துக்கு முன்னால முப்பதாயிரம் ரூபாயக்கு வாங்கிப் போட்ட கிரவுண்டுய்யா. பொண்டாட்டி நகையவித்து ஜி.பி.எம். லோன் போட்டு குருவி சேர்த்தது மாதிரி சேர்த்து வச்ச பணத்தையும் போட்டு வாங்கிப் போட்ட இடம்டா..??

சேட்டு, முத்துவேல் தன்னைப் புகழ்வது போல் வாயை ஒரு கோடாக்கினான். இதற்குள் பல்வேறு பிளாட் பால்கனி களில் பல்வேறு உருவங்கள் தோன்றின. சிலருக்கு சேட்டு மாட்டிக் கொண்டதில் சநதோஷம். சேட்டை விரும்பாத மற்றும் பலருக்கு புது வருத்தம். இந்த வில்லன் செய்த வில்லங்கத்தால், லட்சககணக்கான ரூபாயில் வாங்கி போடட பிளாட்டுக்குக் கேடு வந்துவிடக் கூடாதே என்ற பயம். அந்த பயத்தின அடிப்படையில் வில்லாதி வில்லனான அந்த சேட்டை கதாநாயகனாகப் பார்த்தார்கள். தங்கள் விருப்பத் திறகு விரோதமாகவே சேட்டுக்கு ஆதரவாளராய் மாறினார் கள். சேட்டுக்கும் ஒரு பிரச்னை, அதையே ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டான். இவனை விரட்டுகிற விரட்டில். பிளாட்டுகளில் பிளாட் போடுற பசங்க பயப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/119&oldid=600577" இலிருந்து மீள்விக்கப்பட்டது