பக்கம்:பூநாகம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 3

அங்குமிங்குமாய் இன்னொரு தடவை பார்த்துக்கொண்டு தெற்கு நோக்கி நாற்பத்தைந்து டிகிரி சாய்வில் பறக்கப் போனது. நாலடிச் சரிவு உயரத்தில் பறந்துவிட்டது, ஆனால், ஒரு ஆறடி பக்கத்துச் சுவரில் இருந்த பூனை அதே நாற்பத்தைந்து டி கிரி சாய்வில் பாய்ந்தது. இந்த இரண்டிற் கும் இடைவெளி இரண்டே இரண்டு அடிதான். விநாடிக்குள் விநாடியான நேரத்தில் அந்தக் காகம் அலறியடித்து மேற்குப் பக்கமாகப் பறக்கப்போனது. ஆனால் அப்போதுதான் ஓர் ஆசாமி, நாலைந்து கம்புகளை உயரவாக்கில் தூக்கிக் கொண்டு பயமுறுத்துவது போல் போய்க் கொண்டிருந்தான். இதனால் அந்தக் காகம் பின்பக்கமாய் உள்வாங்கி, அப் படியே ஆகாயத்தில் எம்பத்தான் போனது. ஆனால் அதன் அச்ச வேகத்தில் இரும்புக் கம்பிகளுக்குள் சிக்கிக்கொண்டது. அது அங்குமிங்குமாகத் துடித்தபோது, கீழே குதித்த பூனை இப்போது அந்தக் காகம் எங்கேயும் போய்விடக்கூடாது என்ற நிதானத்தில் உருமக்கூட சோம்பல்பட்டு நிதான மாய் முன் கால்களை நகர்த்தி நகர்த்திப் போட்டது. அது எச்சல் போண்டா எங்கேயும் போகாது என்பதுபோல் கால்களை வேலியாக்கிப் பார்த்ததே ஒரு பார்வை, அதே மாதிரியான பார்வை.

அந்தக் காகம், இந்த ஆபத்தைப் புரிந்துகொண்டது போல், உடம்பை அங்கும் இங்குமாய் சுழற்றியது. இரண்டு கால்களையும் இரும்புச் சுருள் வளையங்களுக்குள் அழுத்திப் பிடித்தபடியே உடம்பைக் கரகாட்டக்காரி போல் அங்குமிங்கு மாய் சுற்றி, அக்கம் பக்கத்து மனிதர்களைப் பரித விக்கப் பார்த்து அவர்களின் அசட் டையில் அசந்து, பிறகு உயிர் காக்கும் வேகத்தோடு என்ன செய்ததோ, ஏது செய்ததோ, கண் ணிமைச் கும் நேரத்தில் அந்தக் கம்பியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது. உடம்பை அங்குமிங்குமாய் சுற்றிச் சுற்றி இரும்புக் குவியலுக்சம் மண் குவியலுக்கும் இடையில் போய் விழுந்தது ஆனந்தமாய் பறக்கப் போனது. அப்போது தான், அதற்குத் தெரிந்தது, இந்தத் தப்பிப்பு ஒரு தற்காலிக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/12&oldid=600468" இலிருந்து மீள்விக்கப்பட்டது