பக்கம்:பூநாகம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு , சமுத்திரம் 1 1 i

படினும். ஆடாமல் அசையாமல் முத்துவேலை பார்த்துக் கேட்டான்.

'யாருய்யா. நீ. பதறாத காரியம் சிதறாது நிதானமாப் é山五。””

'இந்த நிலத்த வாங்கிப் போட்டவன் ஸார்!’

'யார்கிட்ட வாங்குனிங்க.”

'கண்மணி ராமச்சந்திரன் கிட்டே. காந்தி நகர்ல. இருக் காங்களே அந்தம்மாகிட்டே... !’

அவங்ககிட்டே போய்க் கேளு!’

'அவங்க இறந்துட்டதாய். '

  • அப்போ அவங்க சமாதியத் தேடிப் பிடிச்சு ... அங்க போய்க் கேளு... என்ன ய்யா நீ நிசமாவே, ஏமாந்துட்டியா இல்ல ஏமாத்துறியா? எப்படி இருந்தாலும் எனக்கென்ன? இந்த இடம் திருவான்மியூருல. இன்னும் உயிரோடு இருக்கிற மகோன்னதனோட இடம் .. வில்லங்க சர்டிபிகேட் வாங்கி சப் ரிஜிஸ்திரார் ஆஃபீஸ்ல பத்திரம் பதிஞ்சு. கிரவுண்டுக்கு அஞ்சு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கேன். மெட்ரோபாலிட்டன் ஆபீஸ்ல கார் மேல கார் போட்டு அலஞ்சு திரிஞ்சு பிளான் அப்ருவலோடு எண்பது லட்சத்துல கட்டுன அடுக்குமாடி வீடு . நீ எவ்வளவு ஈஸியா ஒன்னோட இடமுன்னு சொல்ற ... ஒன்ன மாதிரி ஆளுங்கள எல்லாம். ஏய் கூர்க்கா ஒனக்கு வேலயக் காப்பாத்திக்க ஆச இல்லயா... இந்த மாதிரி ஆளுங்கள ஏய்யா விடுற. சட்டப் பேரவை மார்ஷல் மாதிரி கூர்க்கா முத்துவேல் பக்கம் ஓடி வந்தான். அவரது மனைவியும் மகளும் பயந்து விட்டார்கள். அவனைக் கையெடுத்துக் கும்பிட அந்தக் கும்பிடு அவன் வேகத்தைப் பின்னாலும், சேட்டின் எசமானப் பார்வை முன்னாலும்,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/120&oldid=600578" இலிருந்து மீள்விக்கப்பட்டது