பக்கம்:பூநாகம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14 அடுக்காத மாடி

தில் இந்த மகோன்னதன் இடத்தை அந்தக் கண்மணி ராமச்சந்திரன் எப்படி ஏலத்தில் எடுத்தாள் என்ற விவரம் எழுதப்பட்டிருந்தது நினைவுக்கு வரவர அவருள் ஒரு போர்க்குணம் எழுந்தது. அவரையே உற்று நோக்கிய மனைவியையும், மகளையும் 'வாருங்கள்’ என்று மோவாயை ஆட்டிக் காண்பித்துவிட்டு முன் நடந்தார்.

அவரைப் பார்த்து திட்டப்போன ஆட்டோக்காரன், அவர் வந்ததும் வராததுமாய் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போப்பா என்று போர்க்குரல் எழுப்பியபடி, ஆட்டோவிற்குள் உட்கார்ந்த தோரணையில் அசந்து விட்டான். அவர்களும் ஏறிக் கொண்டார்கள்.

அப்போது தூரத்தைப் பற்றிக் கவலைப்படாத முத்து வேல், இப்போது அந்தக் காவல் நிலையம் கண்ணில் படுவ தற்காக துடியாய்த் துடித்தார். அங்குமிங்குமாய் நெளிந் தார். இப்போது அழகம்மா வாய்விட்டே அரற்றினாள்.

குருவி சேர்த்தது மாதிரி சேர்த்த பணமெல்லாம் போயிட்டே. கடைசில தெருவுல நிக்கோமே...நான் எத்தன தடவ சொன்னேன். மெட்ராஸ் ஒத்து வராதுங்க. கான் பூர்லயே இருந்துடலாம்னு. சொன்னனே கேட்டீங்களா..தமிழ் தமிழ்நாடுன்னு மூச்சுக்கு மூச்சு பேசுற ஒங்களுக்கு என்ன நடந்திருக்குன்னு பார்த்தீங்களா. தமிழ் நாட்ல வாழத்தான் முடியல சாவுறதயாவது அங்க வச்சிக்கலாமுன்னு நீங்க விளையாட்டாச் சொன்னது வினையாயிட்டே. சாகாமச் சாகப் போறோமே. அய்யோ ஒங்களுக்கு பிளட் பிர ஷர்னு தெரிஞ்சும் நான் திட்டுறேனே. என் மனசு கேட்க மாட்டக்கே. கலை. ஒங்கப்பாவுக்கு மாத்திரை கொடுடீ.’

அழகம்மா மீண்டும் பேசி விடுவோமே என்று பயந்து போய் வாயில் வலது கையால் அழுத்திக் கொண்டாள். கலைச்செல்வி அம்மாவை அனைத்துக் கொண்டாள். மூத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/123&oldid=600581" இலிருந்து மீள்விக்கப்பட்டது