பக்கம்:பூநாகம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 1 1 3

வேல் விறைத்தும் விக்கித்தும் சிறிது வீறாப்போடும் நிமிர்ந்து நின்றார். ஆட்டோ டிரைவர் இளைஞன் கேட்டான்.

அந்த சேட்டு பிராடு. அவன் கிட்டவா மாட்டினிங்க... என்ன நடந்தது.”

வாயை வலுக்கட்டாயமாக மூடிய அழகம்மா மீண்டும் அரற்றினாள்.

அதை ஏன் கேக்குற கம்பி. இவரு ஊர்ல அனாதயா பிறந்து எப்படியோ எஸ்.எஸ் எல்.சி. டிச்சுட்டு கான்பூர்ல ஒரு தோல் கம்பெனில சேர்ந்தாரு பக்கத்து ஊர்ல இவரப் போலவே அநாதரவாப் போன என்னையும் கல்யாணம் பண் ணிக்கிட்டாரு. இவள் கான்பூர்லதான் பிறந்தாள். இவருக்கு இந்த மண்ண மறக்கமுடியல. மகளுக்குக் கலைச்செல்வின் து பெயரிட்டாரு. கம்பெனி விஷயமா இந்த சி எல்.ஆர்.ஐ யில வருஷத்துக்கு ஒரு தடவ வருவாரு. அப்போ யாரோ. சொன்ன இந்த இடத்த வாங்கிப்போட்டாரு வருஷா வருஷம் நிலத்த பார்க்கிற மனுஷன் போன வருஷம் பார்க்கல. அதே சமயத்துல அழகம்மா... அழகம்மா... நம்ம நிலத்தோட மதிப்பு. இப்போ பத்து லட்சம். அஞ்சு லட்சத்துல ஒரு கிரவுண்ட் வித்து. ரெண்டு லட்சத்துல ஒரு சின்ன வீடு கட்டி, மூணு லட்சத்துல நம்ம மகளுக்கு தமிழ்நாட்டிலேயே ஒரு நல்ல பையனாப் பார்ச்கலாமுன்னாரு அடம் பிடிச்ச எங்கள எப்படியோ கூட்டி வந்துட்டாரு. கான் பூர் கம்பெனில கணக்கு வழக்கை முடிச்சுட்டு போன வாரந்தான் மெட் ராஸ் வந்தோம். சொந்தமும் இல்ல பந்தமும் இல்ல. ஒரு லாட்ஜ்லதான் இருக்கோம். வாடகை வீடு பார்த்துட்டு வர்றோம். அதுக்குள்ள இந்த அநியாயத்த பார்த்துட் டோம்.”

"மம்மி அழாதீங்க... டாடி. இந்தாங்க மாத்திரை.) அந்த டிரைவர் பாதிக்கப்பட்ட தை அந்த ஆட்டோ நின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/124&oldid=600582" இலிருந்து மீள்விக்கப்பட்டது