பக்கம்:பூநாகம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 16 அடுக்காத மாடி

காட்டியது. பிறகு அங்குமிங்குமாய் அலை மோதி, அந்தக் காவல் நிலையததிற்கு முன்பாக நின்றது.

முத்துவேல் மனைவியையும், மகளையும்-பற்றியபடியே அந்த செஞ்சிவப்புக் கோடுகள் போடட கட்டிடத்தின் மாடி களில் ஏறினார். வாசலில் துப்பாக்கியுடன் வழிமறித்த ஒரு காவலரிடம் அத்தனை யையும் சொல்லச் சொல்ல அவன் தலையாட்டிக் கேட்டான். அப்புறம் அதோ போய்ச் சொல் லுங்க, என்று கை காட்டினான்.

இடுப்புத் துப்பாக்கியோடு ஏதோ செக்யூரிட்டி டியூட் டிக்குப் புறப்பட்ட இன் ஸ்பெக்டர் முத்துவேலரை சுழிபோட் டுப் பார்த்தார். சத்தமாய்ப் பேசப் போனவரை, மெதுவாப் பேசங்க எனக்குக் காது கேட்கும்’ என்று ஸ்பீட் பிரேக் போட்டார். முத்துவேலும் அழகம்மாவும் அவரிடம் மாறி மாறி முறையிட்டார்கள். என்ன நெஞ்சழுத்தம் இருந்தால் அந்தப் பொண்ணு பேசாமல் அரோகன்டா நிற்பாள்’ என்று கலைச்செல்வியை கர்வத்தோடு பார்த்தார். இதற்குள் ஒரு டெலிபோன். ஹலோ- நான்தான். இதுக்குப் பேர்தான் டெலிபதி... இப்போதான் அந்தப் பார்ட்டியும் வந்திருக்கு. டோண்ட் ஒர்ரி, ஒங்க காம்ப்ளெக்சுக்கு செக்யூரிட்டி ஏற்பாடு செய்யறேன். இன்னிக்குக் கமிஷனர் ஆபீஸ்ல டுட்டி... நாளைக்கு வச்சுக்கலாம். எங்க ஆட்கள அனுப்பி வைக் கிறேன். அப்பதான் ஒங்க பிளாட் ஆளுங்களுக்கும் ஒங்க மேல ஒரு இது’ வரும். ’

இன்ஸ்பெக்டர் அந்த மூவர் பக்கமும் நெருங்கி வந்து கத்தினார்.

பெரிய மனுஷங்க மேல. பழி போடுறதுக்கு இப்படி எத்தன பேருய்யா கிளம்பி இருக்கீங்க. அடுத்த தெருவுல ஏழைப் பிள்ளையாரை பத்து லட்சத்துல பணக்காரராய் ஆக்குனவரே அவரு. வேனுமின்னால் தாசில்தாரப் பாருங்க... அப்படி இல்லாமல் அங்க போய் பழயபடியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/125&oldid=600583" இலிருந்து மீள்விக்கப்பட்டது