பக்கம்:பூநாகம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 அடுக்காத மாடி

கிரிமினல் கேஸ். ஆனால், போலீஸ் சேட்டுப் பக்கம் இருக் கறதுனால ஒண்னும் பண்ண முடியாது. ஆனால், கோர்ட்ல ஒரே சமயத்துல, சிவில், கிரிமினல் கேஸ் போடலாம். பத்து லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்குப் போடுவோம். அப் புறம் கேட்கிற ஒவ்வொரு நூறு ரூபாய்க்கும் ஏழார் ரூபாய்க்கு ஸ்டாம்ப் பேப்பர் வாங்கணும். பத்து லட்சம் ரூபாய்க்கும் எழுபத்தைந்தாயிரம் ரூபாய் ஆகும். என் பீஸ் வேற. அந்த சேட்டு அப்பவும் போகாட்டால் அஞ்சு வருஷத்துல ஜெயிச் சுடலாம். இதுதான் ஒரே வழி, வீரலுக்கு ஒரு எம்.எல்.ஏ.வை யும் கைக்கு ஒரு மந்திரியையும் பிடிச்சு வச்சிருக்கிற சேட்டை வேற வழில மடக்க முடியாது. ஓ.கே... எனக்கு இன்ஸ்பெக் டர்கிட்ட ஒரு கஞ்சா கேஸ் இருக்குது. .”

அந்த ஆட்டோ திகைத்து திசையற்று ஓடியது. அதோ அந்தத் தெருப் பக்கம் வந்தபோது அழகம்மா டிரைவரின் முதுகைத் தட்டி ஆட்டோவை நிறுத்தச் சொன்னாள். அது நின்றதும் அதிலிருந்து குதித்தாள். அவள் முகம் இறுகிப் போய் உடம்பு முறுக்கேறியது. அந்தத் தெருவில் நிதான மாக நடந்தாள் , டிரைவர் உட்பட அந்த மூவரும் அவளை இழுத்துப் பிடிக்கப் போனார்கள். அழகமமா அவர்களைத் தட்டிவிட்டு விட்டு அந்த அடுக்குமாடி வீட்டுக்கு முன்னால் போய் நின்றாள். கீழே குனிந்தாள். ஒரு கை நிறைய மண்ணை அள்ளினாள். மேலே நிமிர்ந்தாள். மண்ணோடு உள் ளங்கையை வாய்க்கருகே கொண்டுவந்து மூன்றுதடவை ஊதிவிட்டாள். ஒவ்வொரு ஊததும், ஒரு புயலாகி, ஒவ் வொரு பிடி மண்ணையும் அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தை நோக்கி அனுத்துகள்களாக அனுப்பிக் கொண்டிருந்த போது

அந்த அடுக்குமாடி வீட்டிற்கு செக்யூரிட்டி கொடுக்க, போலீஸ் வேன் ஒன்று அந்தத் தெருவுக்குள் நுழைந்தது.

§§ NK §§

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/127&oldid=600585" இலிருந்து மீள்விக்கப்பட்டது