பக்கம்:பூநாகம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிக்கள்ளன்

'ஏய் சாய்பு.’

அப்துல்காதர் லேசாய் ஆச்சரியப்பட்டார். உடைமரக் காடு வழியாக நடப்பித்த கால்களுக்கு அந்தத் தெருப் புழுதி தரையில் நங்கூரம் பாய்ச்சிபடியே எதிர்திசையை வியப்பாகப் பார்த்தார். அப்துல்லா என்ற வார்த்தைக்கு அடுத்த வார்த்தை பேசாத பிச்சாண்டி அனைவரின் சம்மதத்துடன் ஏன் அப்படி அழைக்கிறான் என்பது அவருக்கு புரியவில்லை. பாதிச் சந்தேகமாகவும், மீதி நம்பிக்கையாகவும் உடம்பை வலது பக்கமாக வளைத்துப் பார்த்தார். இதுவரை கேட்டறி யாக அந்த வார்த்தை ஒரு கெட்ட வார்த்தையா, அல்லது தற்செயலாய் இருதயத்தில் சம்பந்தப்படாமல், வாய்க்குள் ளேயே ஊறி, தவறி விழுந்த வார்த்தையா என்ற புதிருக்கு விடை கேட்பவர் போல் தன்னோடு நடந்து வந்த தங்கை நசீமாவை நோக்கி உடம்பை இடது பக்கமாக வளைத்துப் பார்த்தார். அருகேயுள்ள மலைப் பகுதியில் பாய் நெய்வதற் குரிய கோரைகளை வெட்டு வெட்டாய் வெட்டி, கட்டிக் கட்டாய் கட்டி, வெறுந்தலையில் சுமந்து வந்த நசீமா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/128&oldid=600586" இலிருந்து மீள்விக்கப்பட்டது