பக்கம்:பூநாகம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. இரையும் இறையும்

மரண விடுதலை மட்டுமே. ஒரு மரணம் உடலிலிருந்து ஏற் படும் ஓர் உயிர் விடுப்பே அன்றி ஆன்ம விடுவிப்பு அல்ல என்பதை அந்தக் காகமும் புரிந்து கொண்டதுபோல் தலை யாட்டியது. இப்போது, தான காகம் இல்லை என்பதையும் கண்டு கொண்டது.

அந்தக் காகம், ஆகாயத்தையே அண்ணாந்து பார்த் தது. அங்கே நாலைந்து காகங்கள் வட்டமடித்தன. அவற் றைக் கரைந்து கரைந்து கூப்பிட வேணடும் போன்ற ஓர் உணர்வு. பிறகு, எங் யப்பன் குதிருக்குள் ஆல்லை’ என்பது போல், அவை அங்கே வந்து மா டிததுக் கத்தி இது இருக் கும் இடத்தைக் காட்டிக் கொடுக்குமே அனறி, இதை உய் விக்க முடியாது எனபதைப் புரிந்ததுபோல் சும்மாவே கிடந் தது. முன்பு ஒரு குடியிருப்பு அருகில் இன்னொரு காகம் இப்படிக் கிடந்தபோது, மறறொரு காகம் அதன்மேல் உட் கார்ந்து அதன கொண்டையைக் கொத்தியதும், இது அந்தக் காகத்தை விரட்டியதும் நினைவுக்கு வந்தது. ஆகையால் ‘வாழ்ந்து கெட்டவாகள தமது உறவுக்காராகளைப் பார்க்கக் கூசி ஒதுங்கிக் கொள்வதுபோல் கூனிக் குறுகிக் கிடந்த அந்தக் காகம் திடீரென று கத்தியது.

அந்த சரளைக்கல் மேட்டில் அதே பூனை, சுட்ட சங்கு நிறம்; ஆடையிடையே வெள்ளையும் ஊதாவுமான புள்ளி கள். கழுத்தில் கறுப்பு வளையம் நானகு கால்களையும் ஒன்றாகக் குவித்துக்கொண்டு வாலை முன்பக்கமாய் சுருட்டி ஒரு யோகி மாதிரி உட்கார்ந்து கொண்டு அநதக் காகத்தைக் கணகளால் தேடியது. நீண்ட நாட்களாக இந்தக் காகம் பார்த்திருக்கும் பூனைதான பலதடவை அது மரத்தில் ஏறும்போது இம்த இந்தக் காகம், அதன. மேல் தாழப் பறந்து, தனது நகக் கால்களால், அதன் தலையைப் பிராணடியிருக்கிறது. சத்தம் போட்டு மற்ற பறவைப் பிராணி களை உஷார்ப்படுத்தி யிருக்கிறது. அவ்வப்போது அதன் முதுகைத் தட்டி, உன்னால் இப்படிப் பறக்க முடியுமா என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/13&oldid=600469" இலிருந்து மீள்விக்கப்பட்டது