பக்கம்:பூநாகம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 121

திசையை பார்த்தும், ஊர் திசையை பார்த்தும், அண்ணனை பார்த்தும் கோரைக் கட்டோடு ஒரு சுற்றுச் சுற்றியபோது அந்த கோரை கூட அப்துல் காதர் முகத்தில் போய். இடித்தது. பிச்சாண்டியை நான்கு பேர் பிடிததுக் கொண் டார்கள்.

இப்படிப் பிடித்த நான்கு பேர்களின் காலடிகளின் இடை வெளியில் ஒரு சில முகங்கள் சட்டம் போட்ட சதை முகங் களாய் தென் பட்டன. அந்த முகங்களும், அப்துல்காதரை, அசை போட்டு பார்த்தன. ஆசாமிகள இருந்தபடியே கண் களில் மிரட்டினார்கள்.

அந்தச் சாவடிச் சுவரை ஒட்டியிருந்த ஒரு குத்துக் கல்லில் உட்கார்ந்திருந்த முத்துலிங்கம், தனக்கும் அங்கே நடைபெறுவதற்கும் சம்பந்தமில்லை என்பது போலவும், அது தனது தரத்திற்கு தாழ்ந்தது என்பது போலவும் அண்ணாந்து பார்த்தார். அதே சமயம் மேல் நோக்கிய முகத்திலிருந்து கண்கள், அந்தப் பக்கமாய் கீழ் நோக்கின. ஒருத்தன் மேல் கண்ணனா இருப்பன்'. இல்லன்னா, கவு கண்ணனா இருப்பான். ஆனா இந்த முத்துலிங்கம் கீழே பார்த்துக் கிட்டே மேல பார்க்கார். மேல பார்த்துகிட்டே கீழேபார்க்கார். இவரு எந்தக் கண்ணுல சேத்தி என்று ஒரு வாலன்’ ஒரு தடவை கேட்டபோது, ரெட்டைக் கண்ணன்’ என்று இந்த பிச்சண்டிதான் அப்போது பெயர் வைத்தான். இதுவே அவருக்கு வக்கணையாக ஊர் வாயில் பதிவாகிப் போனது. ஆசாமி குத்துக்கல்லோடு குத்துக்கல்லாக அதன் தொடர்ச்சி போல் அமர்ந்திருந்தார். பிச்சாண்டி வாய் வீச்சில் தன் பேருக்கு எதிர்மறைவாய் விளாசினார்.

அடே நம்பிக்கைத் துரோகி. இன்னிக்கு நீ பதில் சொல்லாம ஊருக்குள்ள போக முடியாது.டா. ஒப்பனை உதைக்கிற பயலே. ஈரத் துணியைப் போட்டு கழுத்தறுக்கிற கவர்மெண்டு பயலே.’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/130&oldid=600588" இலிருந்து மீள்விக்கப்பட்டது