பக்கம்:பூநாகம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 குடிக்கள்ளன்

அப்துல் காதருக்கு, இது அதிகபட்சமாகத் தோன்றியது. செயினை பிசைந்தபடி வானத்தை நோக்கிய நசீமாவை முதுகைப் பிடித்துத் தள்ளியபடியே அந்த இடத்தைவிட்டு அகலும்படி சமிக்ஞை செய்துவிட்டு, ஏதுவுமே நடக்காதது போல் அப்படி நடக்கவிடப் போவதில்லை என்பது போல் பேசினார். ஆனாலும், அவர் குரல் லேசாய் நடுங்கியது.

‘'என்ன பிச்சாண்டி. பாக்கெட்ட அதிகமாகப் போட் டுட்டியா? ஒரு பாக்கெட்டுக்கு மேல போட்டுட்டு இப்படிப் பேசினா உடம்பு தாங்காதுப்பா ...”*

சென்னையிலே உறை என்றும், மதுரையில் பாக்கெட்டு என்றும் ஆகு பெயராகி, மலிவு விலை மது என்ற பெயரை மறைத்து, நாட்டுச் சாராயம் என்ற புனைப் பெயராக்கிய திரவத்தை குடித்துவிட்டுத்தான், பிச்சாண்டி பேசுகிறான் என்ற அனுமானத்தில் பதிலளித்த அப்துல்காதரை, அருகே உள்ள நாச்சிமுத்து நல்லதுக்கு சொல்வது போல் பொல்லாப் பாய் பேசினான். இரண்டு பாக்கெட்டுக்களை உறிஞ்சிக் குடித்துவிட்டு, மூன்றாவது பாக்கெட்டை உள்ளேயிருக்கும் சாராயத்தோடு கடித்து குடிக்கும் மனிதர் இவர், வாய்க்கு மேலே சாராயம் எட்டிப் பார்க்கும், கண்களில் சிவப்புப் சிவப்பாய் தேக்கி வைத்திருக்கும் நடுத்தரம். நல்ல உயரமும், செட்ட அகலமும், கொண்டவர் ஆனாலும் போதையில் லாமலே அதட்டினார்

'அவன் என்னடான்னா, நம்பிக் கெட்டுட்டோமேன்னு துடிக்கான். நீ எரிகிற தீயிலே எண்ணையா ஊத்துறே? அவன் உடம்பு தாங்காதுன்னா என்னய்யா அர்த்தம்? அவனை அடிச்சுப் பாரு பார்க்கலாம். உன் கச்சத்துக்குள்ள நாங்க நுழையுறோம்.’’

அப்துல்காதர் அழாக் குறையாக கேட்டார். நசீமா அவர் முன்னால் போய் நின்று கொள்ள, அவர் தங்கையின் கழுத்து வழியாக முகத்தை நீட்டிக் கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/131&oldid=600589" இலிருந்து மீள்விக்கப்பட்டது