பக்கம்:பூநாகம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 128

'நான் எப்போய்யா அடிப்பேன்னு சொன்னேன்... உங்க குருக்கு என்னய்யா வந்திட்டு? குடிச்சா நம்ம உறவு முறை கூட மறந்துடனுமா? ஏய் பிச்சாண்டி என் மொகத்த ஒரு தடவ பார்த்துப் பேசுடா உனக்கு நான் என்னடா கெடுதி பண்ணினேன் ???

அப்துல் காதர் நேருக்கு நேராய் பார்த்து இப்படிக் கேட்டதில் பிச்சாண்டி அதிர்ந்து போனான். ஆறடி உடம்பை வைத்திருந்தால், கொக்கன் என்று பெயர் கொண்ட அவன், இப்போது குருவிபோல் குறுகி நின்றான். அப்துல்காதருடன், அவன் மேற்கொண்ட பஸ் பயணங்கள்,அண்ணன் தம்பியாய ஒரே கட்டிலில் தூங்கிய இரவுகள், அவன் கோபத்தை தணித்தன. அதைப் புரிந்துகொண்ட குத்துக்கல்லு ரெட்டை கண்ணன், முத்துலிங்கம், லேசாய் செருமினார். இதுக்கு மேல என்ன கெடுதி இருக்க முடியும்? பாவ்லாவப் பாரு பாவ்லாவா’’ என்று ஆகாயத்தைப் பார்த்து ஒரு அம்பை கiசினார். அது பிச்சாண்டியை உந்த, அவன் ஸ்கட் ஏவுகணையானான்.

'இன்னிக்கு ஒன் கணக்கை முடிக்காம விடப் போற தில்லடா..??

'இந்தா பாரு பிச்சாண்டி... நாம தாயா பிள்ளையா பழகுகிறோம். எந்தக் காலத்துல ஒரே சாதியில இருந்தமோ தெரியாது. ஆனா அப்போயிருந்தே அணணன், தம்பி, மாமன், மச்சான் உறவுல வழி வழியாப் பழகுகிறோம். என்னை வேணுமுன்னா நாயே பேயேன் னு திட்டு. ஆனா சாய்புன்னு மட்டும் சொல்லாதே. இந்த வார்த்தை இந்த பட்டியிலே கேட்டறியாத வார்த்தை... ஒன்ன கள்ளப் பயலேன்னு நான் சொன்னா நீ சம்மதிப்பியா? உங்க சாதி சனம்தான் சம்மதிக்குமா? கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/132&oldid=600590" இலிருந்து மீள்விக்கப்பட்டது