பக்கம்:பூநாகம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 1 25

சாவடியிலிருந்த வேறு ஒருவன் ஓடி வந்து பாம்பு போல் கால்களை சுற்றிக் கொண்டே அந்த "இளைஞன் கையை ரத்தம் வரும்படி கிள்ளினான். வலிபொறுக்க முடியாத அந்த இளைஞனின் ஒத்தக்காலும், அரை குறைக்காலும் ஒருங்காய் துடித்தபோது, பிச்சாண்டி அவனை எட்டித் தள்ளினான். அப்போதும், அந்த இளைஞன் சுருண்டு சுருண்டு அவர்கள் முன்னால் நகர்ந்தான். இவர்கள் காலால் இடறித்தள்ளி னாலும் அவர் உடம்பு முழுவதையும் ஆமை போல் சுருட்டி அவர்கள் முன்னால் முட்டுக்கட்டையானபோது

நசீமா, அண்ணனைச் சுற்றிச் சுற்றியே வந்தாள். அல் லாவைத் தொழும் அந்தக் கரங்கள் அந்த கூட்டத்தைப் பார்த்து தொழுதன. அவர் ஆற்றாமையை சகிக்கமாட்டாது, பாய்ந்து வந்த கூட்டம் பதுங்கியது போல பார்வையிட்ட போது குத்துக்கல்லு மனிதர் செருமிக்கொண்டே எழுந் தார். உட்கார்ந்திருந்த கல்லில் ஒரு காலை வைத்து உதைத்தபடியே கத்தினார். ‘ஏமுலு ... பேடி பயலு மாதிரி நிக்கிறீங்க. அவர் சாதிக்கு நாம பொறந்தோமா? நம்ம சாதிக்கு அவர் பொறந்தாரா?”

ஏவல் கூட்டம் இப்போது அப்துல் காதரின் அழுத்தம் திருத்தமான எதிரிக் கூட்டமாகியது. நசீமாவைப் பார்த்து நகரச் சொல்லி சைகை செய்தது.

நசீமா வீறிட்டுக் கத்தினாள். அண்ணனுக்கு கேடயமா னாள். இரண்டு பேர் அவளைப் பிய்தெறியப் போவது போல் கைகளை கொக்கி போல் குவித்து சிரேன்களாக்கி னார்கள்’. இதற்குள் அந்த பக்கமாய் வந்த இரண்டு மூன்று பேர் தாக்க வந்தவர்களை, தங்கள் மார்புகளில் தாங்கிக் கொண்டே சமாதானப்படுத்துகிறார்கள்.

இந்த இடைவெளியில் என்ன செய்யலாம் என்பதுபோல் நசீமா இங்கும் அங்குமாய் சுழன்றாள். பிறகு இரு இரு? என்று கையாட்டிச் சொல்வது போல் முகமாட்டி பார்த்து விட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/134&oldid=600592" இலிருந்து மீள்விக்கப்பட்டது