பக்கம்:பூநாகம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 குடிக்கள்ளன்

வண்டிப் பாதை வழியாக ஊர்ப்பக்கம் ஓடினாள். ஒடி, ஒடி நிற்பதும், அண்ணனை திரும்பிப் பார்ப்பதுமாய் ஒடிக் கொண்டே இருந்தாள். ஊர்க் கிணற்றில் வாளியைப்பிடித்த பெண்கள் அவளை வளைந்து பார்த்தனர். கடைக்காரர்கள் வளைகளுக்குள் இருந்து சாட்டிப் பார்க்கும் எலிபோல் தலை யைக் காட்டினார்கள். சிலர்; என்னம்மா ஆச்சு, என் னம்மா ஆச்சு’ என்று அவள் பின்னால் ஓடினார்கள். எதிர் திசையில் வந்தவர்கள் அவளை ஆற்றுப்படுத்துவது போல் கைகளை நேராய் நீட்டி விரல்களை உயர்த்தி உள்ளங்கை களைக் காட்டினார்கள். ஆனால் அவளோ, வண்டிப்பாதை வளைந்த இடத்திலிருந்து பிரிந்து, மேற்குப் பக்கமாய் ஒடி, தென் கிழக்காய் பாய்ந்து கூட்டுறவுச் சங்கத்தை தாண்டி, குறுக்காய் கிடந்த புறம்போக்கு தரிசுக் காட்டில் தாவி, பள்ளி வாசல் முன்னால் வந்து நின்றாள். பரக்கப் பரக்கப் பார்த் தாள். அப்போது தொழுகைக்கு பாங்கு சொல்லும் லப்பை அவளைப் பரிவோடு பார்த்து, அவள் சொல்லப் போவதைக் கேட்க ஆயத்தம் காட்டினார். நசீமா என்ன நினைத் தாளோ, அங்கிருந்து ஓடி, பீடிக் கடையைத் தாண்டி, பள்ளிக்கூடத்தை கடந்து ஊரின் இன்னொரு மூலையில் கிடந்த ஒரு ஒலை வீட்டுக்குள் புகுந்தாள்.

வீட்டு முற்றத்துடன் ஒட்டியிருந்த தொழுவில் ஒரு காளை மாட்டிற்கு 'உன்னி’’ (மாட்டுப்பேன்) எடுத்துக் கொண்டிருந்த மூக்கையா, நசீமாவைப் பார்த்துப்பதறினார். மாட்டை அதன் பிட்டத்தில் ஒரு கத்துகுத்தி தள்ளிவிட்டு அவள் பக்கமாக ஓடி வந்தான். வியப்பொன்றும் புரியாமல், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இப்படி எந்த வீட்டிற்கும் வந்தறியாதவள். என்ன ஆச்சு...

அடர்ந்த கூந்தலுடன் மஞ்சளை அரைத்து மருதாணி யில் தேய்த்தது போன்ற லாகவத்துடன் மான்குட்டி போல் தேம்பிய நசீமாவைப் பார்த்தபடியே ஏ ராசம்மா இங்க வா? என்று சொல்லிவிட்டு, மீண்டும் என்னம்மா ஆச்சு? வாப்பா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/135&oldid=600593" இலிருந்து மீள்விக்கப்பட்டது