பக்கம்:பூநாகம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 12?

வுக்கு ஏதாவது...” என்ற துக்கச் செய்தியை வானொலிச் செய்தியாளர் குரலைத் தாழ்த்துவதுபோல் தாழ்த்தினார், மூக்கையா. இதற்குள் மூக்கையாவின் மனைவி ராசம்மா, தங்கை மீனாட்சி, தம்பித் தடியன்களான பாண்டியன், செல்லமுத்து ஆகியோர் அங்கே திமுதிமுவென்று வந்தார்கள் .

நசீமாவால் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் பேச முடியவில்லை. அண்ணன், அண்ணன்’ என்றுதான் சத்தம் வந்தது. சிறிது விலகிப் போய் நின்று கொண்டு அண்ணன் இருந்த திசையைக் காட்டி அடிக்காங்க, அடிக் காங்க’ என்று அழுதழுது சொன்னாள். எப்படியோ அவசர அவசரமாய் நடக்கிறதைச் சொல்லி விட்டாள். உடனே மூக்கையா சாட்டைக் கம்பை எடுத்துக்கொண்டு சரி நட3 என்றான். தம்பிகளில் ஒருவன் வெட்டரிவாளையும் இன் னொருத்தன் வேல் கம்பையும் எடுத்துக் கொண்டான்... பிள்ளை குட்டிகளும் சேர்ந்து கொண்டன.

நசீமாவுடன் ஒரு குடும்பமே ஊர்வலமாகி, அந்தச் சாவடிப் பகுதிக்கு வந்தது.

ஏழெட்டுப் பேரின் வியூகத்திற்குள் மாட்டிக் கொண்ட அப்துல் காதர், மூக்கையாவைப் பார்த்துவிட்டு சத்தம் போட்டே அழுதார். மூக்கையா, அந்த வியூகத்தை அபிமன்யூ மாதிரிப் பார்த்தான். ஒவ்வொருவனையும் முதுகைப் பிடித்தும், மார்பைப் பிடித்தும் தள்ளினான், உள்ளே டாய்ந்து காதரை தோளோடு இழுத்துக் கொண்டு துள்ளினான்.

காதர் அண்ணன. இப்ப எவனாவது தொடுங்க பார்க் கலாம். பேடிப் பயல்வளா வாங்கல.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/136&oldid=600594" இலிருந்து மீள்விக்கப்பட்டது