பக்கம்:பூநாகம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 28 குடிக்கள்ளன்

குத்துக்கல்லில் உட்கார்ந்திருந்த ரெட்டைக் கண்ணனும், முத்துலிங்கமும் எழுந்தார்கன். மூக்கையாவுக்குச் சொல்வது போல் கூட்டத்தில் நின்ற நாச்சிமுத்து சொன்னார்.

'குலத்தக் கெடுக்குமாம் கோடாறிக் காம்பு. இந்த பயல் கொழுந்தியா புருஷன் பிச்சாண்டியை ஏமாத்தினது பெரிசா தெரியலை பாரு.. நிலச் சீர்திருத்தத்துல நம்ப அம்பலத்துக்கிட்டே இருந்து கிடைச்ச உதிரி நிலத்துல அரை ஏக்கரை பிச்சாண்டிக்கு கொடுக்கறதா இந்தக் காதரு பய வாக்குக் கொடுத்துட்டு கடைசியிலே பாய் விக்கிற மொய் தீனுக்குக் கொடுத்துட்டான் அடுத்துக் கெடுத்த பய. இந்த அநியாயத்தைக் கேக்க துப்பில்லே. வந்துட்டானுவ பெரிசா...??

மூக்கையா, பதில் சொல் என்பது மாதிரி கூட அப்துல் காதரைப் பார்க்கவில்லை. காதரே இப்போது அழுகையை அடக்கிக் கொண்டு மூக்கையாவிடம் ஒப்பித்தார்.

'அல்லாவுக்குத்தான் எல்லாம் தெரியும். அம்பலக்காரர் நிலத்துல உபரியான அரை ஏக்கரை நம்ம பிச்சாண்டிக்குக் கொடுக்கனுமுனனுதான், அசிஸ்டெண்ட் கமிஷனர்கிட்டே சொன்னேன். இதுக்காகவே இ ந் த பிச்சாண்டியையும் கூட்டிக்கிடடுப் போய் அவருகிட்டே ஒரு கும்பிடு போட வெச்சேன். ஆனால் நான் யாரு, சாதாரண பியூன். நாலு ஜில்லாவுக்கு பைல்களைத் தூக்கிட்டு லொக்கு லொக்குன்னு அலையுற எளியவன். எனக்குத் தெரியாமலே பாய் விக்கிற மீரான் ஒரு பெரிய ஆளோட சிபாரிசுலே கலெக்டர்கிட்ட போயிட்டாரு. அவரும் ஆடரு போட்டுட்டாரு. கலெக்டர் கிட்ட என் சொல் எடுபடுமா, இல்ல மீரான் கூட்டிக்கிட்டுப் போன யூனியன் சேர்மன் சொல்லு எடுபடுமா? நீயே சொல்லு மூக்கையா. இவ்வளவுக்கும் இந்த பிச்சாண்டிய நானே டிக்கெட் எடுத்து மதுரைக்கு கூட்டிப் போனேன். அவன் சாப்பாடு செளகரியத்துக்கு நானே செலவளிச்சேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/137&oldid=600595" இலிருந்து மீள்விக்கப்பட்டது