பக்கம்:பூநாகம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 குடிக்கள்ளன்

யெல்லாம் வித்தவன் நீ. ரெட்டக் கண்ணு பயலுவ பேச்சக் கேட்டு. கெட்டுப் போகாதடா. விக்கிறத்திற்கு பாய் இருந் தாலும் படுக்கத்துக்கு ஒரு தரை கூட இல்லாத மொய்தின் தான் வச்சுட்டுப் போட்டோன்டா..?

பிச்சாண்டி, அப்துல் காதருக்குப் பயந்தது போல் கண் களைத் தாழ்த்தியபோது குத்துக்கல்லர் இன்னொரு அம்பை எய்தார்.

'காதருக்கு வால் பிடிக்க இவன் யாருன்னு கேளேம்ல

சாதி கெட்ட பயல.”

மூக்கையா இப்போது ஒரு காலில் நிமிர்ந்து நின்ற, அந்த ஒன்றைக் கால் இளைஞனுக்குச் சொல்வதுபோல் குத்துக்கல். ரெட்டைக் கண்ணனை, பேச்சுப் பேச்சாய் குட்டினார்.

நோன் யார்னு சொல்றேன்... இனிமேலாவது எருமை மாட்டுப் பயல்வளுக்கு சொரணை வரட்டும். நான் இந்த மூக்கையா அவன் தம்பி தங்கச்சிகளோட பெண்டாட்டி பிள்ளைகளோட இந்த அப்துல் காதர் குடும்பத்துக்கு ஒரு. குடிக்கள் ளன். ஆதி காலத்திலிருந்தே இந்த சுற்று வட்டா ரத்துல இருக்கிற ஒவ்வொரு முஸ்லீம் குடும்பத்துக்கும், கள்ளர் சாதில ஒரு குடிக்கள் ளன் இருக்கது. சில பயலுவளுக்குத் தெரியுமோ தெரியாதோ? நாலு காடு சுத்தி கால ஒடிச்சுக் கிட்ட ஒனக்கு தெரியும்னு நெனக்கேன். இந்த வகையறாவுல எம்பாட்டன் , முப்பாட்டன் காலத்துல இருந்தே அப்துல் காதர், பாட்டன் முப்பாட்டனுக்கு நாங்க குடிக்கள்ளன் வம்சம். அண்ணன் தம்பி முறையில பழகுறோம். அவன் வீட்டுக் கல்யாணத்துல நான் மொதல்ல நிப்பேன் என் வீட்டுக் கல்யாணத்துல இவன நிப்பான். போன வருஷம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/139&oldid=600597" இலிருந்து மீள்விக்கப்பட்டது