பக்கம்:பூநாகம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 5

பதுபோல் கேட்டிருக்கிறது. ஆனால், இப்போதோ. காலம் கலிகாலம்.

அந்தப் பூனை, இந்தக் காகத்தை இப்போது பார்த்து விட்டது. அதன் அசைவில் இரண்டு கற்கள் உருண் டோடின. அது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தது. அதனருகே நெருங்கியது. கால்களால் இழுத்துப் போட்டு அந்தக் காகத்தை வாயால் கவ்வ வேண்டியதுதான் பாக்கி, உடனடி யாக, இதனைப் புரிந்துகொண்ட அந்த முடக் காகம், அங்கு மிங்குமாய்ப் பார்த்துப் பார்த்து அரற்றியது பிறகு, தத்தித் தத்தி, துள்ளித் துள்ளி எப்படியோ குதி போட்டு நகர்ந்த போது, எங்கிருந்தோ வந்த சொறிநாய், அந்தப் பூனை யைத் தடுத்தது. இரண்டு எதிர்மறைகள் ஒரு நேர்மறை யாக, அந்தக் காகம் அந்தக் கட்டடக் கடைப்படிகளில் லேசு லேசாய் குதித்து, ஒரு பிளாஸ்டிக் கடையின் முகப்பில் போய் நின்றது. அங்கேயும் இங்கேயுமாய் நடமாடிய மனிதர்களின் காலடிக்குள் சிக்காமல் தலையை வளைத்தும், உடம்பை நெளித்தும், அந்த பிளாஸ்டிக் கடையின் எல்லை காட்டும் தடித்த மடிப்புத் தளத்திற்கு நடந்தது. அந்தக் கடையில் பிளாஸ்டிக் குடத்தை ஒருத்தியிடம் காண்பித்துவிட்டு, அந்தக் காகத்தைப் பார்த்த ஒரு லுங்கிக்காரன், அதைக் காலால் இடறி, கையை ஓங்கினான். அதுவோ, இரண்டு கைகளாலும் மாரடித்தது. இதற்குள், இன்னொரு முண்டாசு பனியன், 'பாவம் பறக்க முடியாம அடி பட்டுட்டு போல. வாயில்லா ஜீவன். நாமா எதுவும் செய்ய வேண்டாம்?? என்றான். இதற்குள் அந்தப் பூனை அதற்கு எதிரே ஒரு சிமெண்ட் துணின் அருகே இதையே குறி வைத்துப் பார்த் தது. உடனே இந்தக் காகம் உள்ளே ஓடிப்போய் அந்தக் கடையின் சாத்தி வைத்த கதவுக்கு மறைவில் போய் நின்று கொண்டது. அவ்வப்போது எட்டி எட்டிப் பார்த்து, அந்தப் பூனையை நோட்டமிட்டது. அதுவோ, அங்கேயே தவம் இருப்பது போல் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/14&oldid=600470" இலிருந்து மீள்விக்கப்பட்டது