பக்கம்:பூநாகம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவளுக்கு அவசரம்

இரவு மணி ஏழு இருக்கும்.

அவள் கழுத்தில் மட்டும் அந்த மஞ்சள் சரடு தெரிய வில்லையானால், அவளைத் திருமணமானவள் என்று சொல்ல முடியாது. அந்த அளவிற்கு வாளிப்பான உடற் கட்டில், குறுகுறுப்பான கண்கள் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருக்க ஒரு விதமான கம்பீரம் கலந்த அழகில் அவள் உருவெடுத்திருந்தாள். எடுப்பான மஞ்சள் புடவையில் செண்பக மலர் போன்ற மேனி. எழும்பூர் ரயில் நிலையத்தின் வெளிப்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி உட்கார்ந்த தோரணையில், டிரைவரே அசந்து போய் விட்டார். அவள் கையில், ஒரு சின்னஞ்சிறிய சூட்கேஸ் மட்டுமே இருந்தது.

இந்திரா நகர்க்குப் போப்பா,’’ என்று அவள் சொன்ன தும், ஆட்டோ ரிக்ஷா உறுமிக் கொண்டு புறப்படத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/141&oldid=600599" இலிருந்து மீள்விக்கப்பட்டது