பக்கம்:பூநாகம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 133

தயாரானது. அந்தச் சமயத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண் மணி அவளிடம் வந்து, 'என்ன ராஜம், ஜேம்ஸ் பாண்ட் மாதிரி திடுதிடுப்புனு வர்றே? எங்கே போயிருந்தே?’’ என்று கேட்டான்.

'ஒரு கல்யாணத்துக்காகத் திருச்சிக்குப் போயிருந்தேன். இன்னைக்குக் கல்யாண ம், குழந்தைக்குச் சுகமில்லன்னு அேவர் டெலகிராம் அனுப்பியிருந்தார். அடிச்சிப் புரண்டு புறப்பட்டுட்டேன். உங்களுக்கு ஏதாவது தகவல் தெரியுமா அக்கா?

  • அடேடே! ஐ ஆம் ஸாரி. போன வாரங்கூட நல்லாத் தானே இருந்தான்?’’

ஆட்டோ ரிக்ஷாவில் உட்கார்ந்தவளின் கண்கள் கலங்கின. புடவைத் தலைப்பால் கண்களை ஒற்றிக் கொண்டே, அவரிடம் படிச்சிப் படிச்சிச் சொன்னேன். மேரேஜூக்கு நீங்க போயிட்டு வாங்கன்னு. அவர் கேட்கல. ஆபீஸ்ல ஏதோ ஆடிட்டாம். இப்போ என் குழந்தைக்கு எப்படி இருக்கோ..??

டோண்ட் ஒர்ரி. ஏதாவது விபரீதமா இருந்திருந்தால் எனக்குச் சொல்லியிருப்பாரே. மன்சை வீணா அலட்டிக் காதே. டிரைவர், தயவு செய்து கொஞ்சம் குயிக்கா இவளைக் கொண்டு விட்டுடுங்க..??

ஆட்டோ ரிக்ஷா கிளம்பிற்று. பின்னால் குரல் கொடுத்த பல்லவனுக்கு வழிவிடாமலே பறந்தது.

峰 豪 拳

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/142&oldid=600600" இலிருந்து மீள்விக்கப்பட்டது