பக்கம்:பூநாகம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 அவளுக்கு அவசரம்

திருவான்மியூரில், எல்லாப் பல்லவன்களும் உறுமிக் கொண்டிருந்தபோது, எழும்பூர் செல்ல வேண்டிய அந்த பஸ் மட்டும், அலட்டிக் கொள்ளாமல் நின்றது. இத்தனைக்கும் அந்த பஸ்தான் முதலில் செல்ல வேண்டும். பிரயாணிகள் பொங்கி வழிந்து புட்போர்டிலும் தங்கினார்கள். கண்டக்டர் எல்லோருக்கும் டிக்கெட் கொடுத்து விட்டார். டைம் கீப்பர் விசிலில் கத்திக் கொண்டிருந்தார். ஆனால் டிரைவரைக் காண வில்லை. பிரயாணிகளின் கண்கள டிரைவர் ளீட்டை மொய்க்க, கண்டக்டரோ விடாமல் விசிலடித்துக் கொண்டி ருந்தார். அந்த விசில், நல்லதோர் நாதஸ்வரத்தை மோச மான ஆசாமி வாசிப்பது போல் ஒலித்தது. என்னதான் விசில் விம்மினாலும், டிரைவர் பத்து நிமிட நேரம் கழித்தே வந்தார். உறிஞ்சிக் கொண்டிருந்த பீடியை வீச மனமில்லாமல் வீசி விட்டு, டிரைவர் தமது ஆசனத்தில் உட்கார்ந்து என்ஜின் ஸ்விட்சைப் போடப் போனபோது, கண்டக்டர் ஊதிக் கொண்டிருந்த விசிலை எடுத்துவிட்டு, டிரைவரிடம் யோவ் அம்மாம்பேட்டை உனக்குக் கொஞ்சமாவது பொறுப்பு இருக் காய்யா? இந்நேரம் பஸ் பெலண்ட் நகர்ல இருக்கனும். எங்கேய்யா போயிருந்தே?’’ என்று கத்தினார்.

டிரைவர், பதிலேதும் பேசாமல், எஞ்சினை ஆன்செய்து, கியரைப் போட்டார் மனைவியிடம் அரிசி வாங்கப் பணம் கொடுத்ததையோ, அவள் பணம் போதாது என்று வாதாடி யதையோ, அவர் அவளிடம் ஆத்திரமாகப் பேசியதையோ இந்த விவகாரம் பத்து நிமிடத்தை விழுங்கி விட்டதையோ, அவர் அந்தப் பிரம்மசாரியான கண்டக்டர் இளைஞனிடம் சொல்ல விரும்பவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/143&oldid=600601" இலிருந்து மீள்விக்கப்பட்டது