பக்கம்:பூநாகம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 135

எழும்பூருக்கும், திருவான்யூருக்கும் இடையே இருந்த அந்த ரோட்டில், டானா வளைவுக்கு அருகில் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரைக்கும், சாலையின் பாதிப் பகுதி ரிப்பேரில் இருந்தது. இரு முனையிலும் கட்டப்பட்டிருந்த சிவப்புக் கொடிகள் அந்த இருட்டில் தெரியவில்லை. காரணம் கார்ப்பரேஷன் லைட்டுகள் மஸ்டர் ரோல் ஸ்கேண்டலுக்கு’ வெட்கப்பட்டது போல் ஆச்சரியப்படத்தகாத முறையில் எரியாமல் இருந்தன. இரண்டு சிவப்புக் கொடிகளுக்கு மத்தி யில் காண்டாமிருகம் போல் காட்சியளித்த ரோலர் மிஷின் ஒரு பகுதியை அடைத்திருந்தது. அதை ஒட்டினாற் போல் ஜல்லிக் கற்களையும், சிமெண்டையும் கலக்கும் மிக்லர் யந்திரம் யானைக் குட்டி மாதிரி, நான்கு மீட்டரை அடைத் திருந்தது. போதாக்குறைக்கு, தார் நிறைந்த டிரம்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. இவற்றைச் சுற்றிச் சம தளத்தில் இருந்து அரையடி வரிசையாகத் தணிந்திருந்த கிளறப்பட்ட அந்தச் சாலையில் பெரிய கற்கள் குவிந்து கிடந்தன. இடையிடையே, ஜல்லிக் கற்கள், குவியல் குவிய லாகக் கிடந்தன. இரண்டு பஸ்கள் தாராளமாகச் செல்லக் கூடிய அந்தச் சாலையில், இப்போது ஒரு பஸ் மட்டுந்தான் கூனிக் குறுகிச் செல்ல முடியும்.

சாலையோரத்தில் போடப்பட்டிருந்த டெ ன் ட் டி ல் சிமெண்ட் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகள் மேல் துண்டை விரித்துப் போட்டு உட்கார்ந்திருந்த மேஸ்திரி கன்னையன் வேலையாள் ஒருவனிடம் பேசிக் கொண்டிருந் தான். சாலையின் இரண்டு பகுதிகளிலும் லாந்தர் விளக்கு களை வைப்பதற்காக, அவன் மந்தவெளியில் இருந்து அங்கே வந்திருந்தான். வேலை ஆரம்பமாகி ஒருவாரம் ஆகி விட்டது. இன்றைக்குத்தான் வண்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விளக்குகளை அவனால் வைக்க முடியும். மென் அட் ஒர்க் என்ற போர்ட், பகலில்கூடச் சரியாகத் தெரி யாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/144&oldid=600602" இலிருந்து மீள்விக்கப்பட்டது