பக்கம்:பூநாகம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 அவளுக்கு அவசரம்

வேலை துவங்கியவுடனே, விளக்குகளைப் பொருத்து வதற்காக, இரண்டு கம்பங்களை நடவேண்டும் என்று ஒர்க் அஸிஸ்டெண்டிடம் அவன் சொல்லியிருந்தான். அவர், கண்டிராக்ட ருடன் 'பிஸியாக இருந்ததால், அவன் சொல் வதைச் சரியாகக் கேட்கவில்லை மறுநாளும் விடாமல் கேட்டான் கன்னையன் . அவர் ஆபீஸிலே போய் இரண்டு கம்புகளை எடுத்து வருமாறு சொன்னார். அவன் ஆபீஸிற் குப் போய், கம்புகளை எடுக்கப் போனபோது, விளக்கு களுக்கு மண்ணெண்ணெய் வாங்க சம்பந்தப்பட்ட சூபர்வை ஸரிடம் பணம் கேட்டான். அவர், முறைப்படி விண்ணப்பிக் காமல் ஏடாகூடாமாய்க் கேட்பது முறையல்ல என்று முறைத் தார். மறுநாள், அதற்கான நோட்டை எழுதி, ஒர்க் அஸிஸ் டெண்ட்டிடம் கையெழுத்து வாங்கச் சென்றபோது, அவர் *பிரெஞ்சு லீவில்’’ போய்விட்டார்.

இன்றுதான், கன்னையனுக்கு இரண்டு கொம்புகளும், இரண்டு லாந்தர் விளக்குகளும், மண்ணெண்ணெய் வாங்குவ தற்குரிய கன் டின்ஜெண்ட் பணமும் கிடைத்தன.

வேலையாட்களை வைத்து, கொம்புகளை நட்டுவிட் டான். லாந்தர் விளக்குகளில் மண்ணெண்ணெயை ஊற்றி விட்டான். மீதியிருந்த எண்ணெயில் திரிகளைத் தேய்த்து, லாந்தர் விளக்குகளில், அவற்றை ஏற்றினான், விளக்கைப் பொருத்துவதற்காக வத்திப் பெட்டியை எடுத்தான்.

米 率 x:

ஆட்டோ ரிக்ஷா ஸ்டர்லிங்ரோடிற்கு வந்துவிட்டது. இந்திரா நகரை நெருங்க நெருங்க, ராஜம் தாய்ப் பாசத்தின் நெருக்கம் தாங்க முடியாமல் தவித்தாள். குழந்தைக்கு. இப்போ எப்படி இருக்கோ? அவரே ஒரு குழந்தை. அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/145&oldid=600603" இலிருந்து மீள்விக்கப்பட்டது