பக்கம்:பூநாகம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 197.

எப்படி கவனிச்சாரோ? சீக்கிரமாப் போப்பா?? என்றாள். டிரைவர் அவளைத் திரும்பிப் பார்த்தான்.

'ஒண்னு சொல்ல மறந்துட்டேன். நீங்க டபுள் சார்ஜ் கொடுக்கணும். இந்திரா நகரலே சவாரி கிடைக்காது. எம்டி யாத்தான் வரணும்...”

என்னப்பா இது. அநியாயமா இருக்கே. முதல்லே நீ கேட்டிருந்தால் நான் பஸ்ல போயிருப்பேனே.”

'இந்திரா நகர் போறதுன்னா டபுள் சார்ஜ் வாங்குறது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். உங்களுக்கும் தெரியு மோன்னு கம்முன்னு இருந்துட்டேன்.”

'அதெல்லாம் முடியாது. மீட்டர் சார்ஜுக்கு மேலே ஒரு நயா பைசாகூடக் கொடுக்க முடியாது.”

'இப்படிச் சொன்னா எப்படிம்மா? எல்லோரும் வாங் கறததான் நானும் கேட்கிறேன். புச் சா ஒண்னும் கேட்கல,’’

'அந்தக் கதையே வேண்டாம். உங்களையெல்லாம் என்ன செய்யனும் தெரியுமா?’’ ராஜத்திற்கும் டிரைவருக்கும் விவாதம் சூடேறிக் கொண்டிருந்தது. என்றாலும் டிரை வரின் பழக்கப்பட்ட கைகள் , இயல்பான முறையில் ஆக்ஸ்ல ரேட்டரை அழுத்த அந்த ஆட்டோ ரிக்ஷா கரடி மாதிரி கத்திக்கொண்டே எட்வர்ட் எலியர்ட்ஸ் ரோடில் தக்காரு மிக்காருமின்றி ஓடிக் கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/146&oldid=600604" இலிருந்து மீள்விக்கப்பட்டது