பக்கம்:பூநாகம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அவளுக்கு அவசரம்

திருவான்மியூரில் புறப்பட்ட அந்த பஸ், இந்திரா நகரில் வந்து நின்றது. ஏற்கனவே லேட்டாகி விட்டது. எழும்பூர் டைம் கீப்பர் சரியான எமன். டிரைவரை மட்டு மில்லாமல், கண்டக்டரையும் சேர்த்துத் திட்டுவார். இந்தச் சமயத்தில் ஃப்ரண்ட் டோர் வழியாக ஏறிய பிரயாணியை நோக்கி, ஸார் படிச்ச நீங்களே இப்படிப் பண்ணினால் எப்படி ஸ்ார்? இறங்கி வந்து இந்த வழியாய் ஏறுங்க’’ என்று கண்டிப்பு கலந்த வினயத்துடன் கூறினார். ஆனால் ஏறிய பிரயாணி ஒரு விடாக் கண்டன். கண்டக்டர் சொன்னதைக் காதில் வாங்காத கல்லுளி மங்கன் மாதிரி பேசாமல் நின்று கொண்டிருந்தார். கண்டக்டருக்கு இது ஆத்திரத்தைக் கொடுத்தது. புறப்படத் தயாரான வண் டியை விசிலடித்து நிறுத்தினார். பின்னர், 'ஸார். நீங்க அங்கிருந்து இறங்கி இங்கே வந்து ஏறப் போlங்களா இல்லியா?' என்றார்.

ப்ரண்ட் வழி பிரயாணி, அசருவதாகத் தெரியவில்லை.

  • என்னப்பா பொல்லாத சட்ட திட்டமெல்லாம் பேசு நீங்க. நீங்க மட்டும் யோக்கியமா நடந்துக்கிறீங்களா?’’

கண்டக்டர் கண்கள் சிவந்தன.

யோவ்! அனாவசியமா ஏய்யா பேசற? உன்னால அங்க இறங்கி இங்க வந்து ஏற முடியுமா முடியாதா?’’

'இறங்கவும் முடியாது, ஏறவும் முடியாது. நீ என்ன வேனுமானாலும் பண்ணிக்கோ , '

    • நல்லதாப் போச்சு. நீ இறங்காட்டி வண்டி நகராது.’’

தகராறு தீர்ந்து, ஃப்ரண்ட் ஆசாமி இறங்கி பின்வழியாக ஏறுவதற்குள் ஐந்து திமிடம் வீணாகிவிட்டது.

事 朝 奉

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/147&oldid=600605" இலிருந்து மீள்விக்கப்பட்டது