பக்கம்:பூநாகம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 139

'குயிக்கா போண்ணே. டைம் கீப்பர் கத்துவான்’’ என்று கண்டக்டர் கத்தினார். திருவான்மியூரில் தாமதமான பத்து நிமிடத்தையும், இந்திரா நகரில் ஏற்பட்ட ஐந்து நிமி டத்தையும் ஈடுகட்டும் வகையில் டிரைவர் ஆக்ஸிலேட்டரை அழுத்தினார். ஸ்பீடா மீட்டர் எழுபது கிலோ மீட்டரைக் காட்டியது. டபுள் விசில் ஒலிக்க, உள்ளே இருந்த பிரயாணி கள் களிக்க, பஸ் ஸ்டாண்ட்களில் நின்ற பிரயாணிகள் முகம் சுளிக்க, அந்தப் பல்லவ பஸ், அப்பல்லோ வாகிக் கொண் டிருந்தது.

மேஸ்திரி கன்னையன், இரண்டு லாந்தர்களிலும் திரி களைப் பற்ற வைத்து விட்டான். சிம்னிகளைப் பொருத்தி விட்டு, இரண்டு விளக்குகளையும் ஒவ்வொரு கைகளிலும் பிடித்துக் கொண்டு எழுந்தபோது, ஒர்க்-அஸிஸ்டெண்ட் வெங்கடசாமி, வேர்க்க விறுவிறுக்க சைக்கிளில் வந்து இறங் கினார்.

கன்னையா, ஜே.இ (ஜூனியர் எஞ்சினீயர்) உன்னை மந்தவெளில் இருக்கிற லாண்டிரிக் கடையில் போயி துணியை வாங்கிக் கொடுக்கச் சொன்னார். இந்தா பில்லு.’’

'நாளைக் வாங்கிக்கு கொடுத்துடுறேனே-’’

நோ, நோ. இப்பவே கையோட வாங்கிக் கொண்டு வரச் சொன்னார். அவரும் அவரு ஒய்பும் காலையில் அஞ்சு

மணிக்கே கோயம்புத்துரர் போறாங்களாம். ஜல்தியா போ.’’

மேஸ்திரி கன்னையன் யோசித்தான். ஜே. இ. மந்தவெளி யில்தான் இருக்கிறார்.கொஞ்சம் நடந்தால்,அவரே லாண்ட்ரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/148&oldid=600606" இலிருந்து மீள்விக்கப்பட்டது