பக்கம்:பூநாகம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 அவளுக்கு அவசரம்

கடையில் போய் துணியை வாங்கியிருக்கலாம். அடையாறி லிருக்கும் இவன், மெனக்கிட்டு போய் அலைய வேண்டிய தில்லை. அவ்வளவு ஏன்? லஸ்ஸில் இருக்கும் இந்த ஒர்க் அஸிஸ்டெண்டே துணிகளை வாங்கிக் கொடுத்திருக்கலாம். நோ. நோ. அவர், ஒர்க்-அஸிஸ்டெண்ட். அவருடைய "ஸ்டேடலாக்கு ஜே.இ.’க்கு டிக்கெட் புக் பண்ணிக் கொடுக்கலாம். லாண்டரி பில்லை வேண்டுமானால் வாங்கி வரலாம். துணிகளைக் கொண்டு போய் கொடுக்க முடியுமா? அது கன்னையன் வேலை.

கன்னையன், லாந்தர் விளக்குகளைக் கம்பங்களில் பொருத்திவிட்டுப் போகலாம் என்று நினைத்தவன் போல், லாண்டரி பில்லைச் சட்டைப் பைக்குள் திணித்துவிட்டு, ஒர்க்-அஸிஸ்டெண்ட் அதற்காக கொடுத்த பணத்தை நிஜார் பைச்குள் திணித்து விட்டு, கீழே வைத்த லாந்தர் விளக்குகளை மீண்டும் எடுக்கப் போனான். ஒர்க் அஸிஸ் டெண்ட் கத்தினார்.

யோவ், விளக் கைக் கீழ போடுய்யா, கடையை மூடிறப் போறான்??

லைட்டைப் போட்டுட்டுப் போறேன். ஸார் ??

இதுக்குத்தாய்யா உன்னை முண்டங்கிறது. விளக்கை அப்புறமா வந்து போடய்யா.’’

x}: 来 水

கன் னையன் லாந்தர் விளக்குகளை அணைத்துவிட்டு ஓர் ஓரமாக வைத்தான். பிறகு, மட மடவென்று மந்தவெளி யை நோக்கிச் சைக்கிளை மிதித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/149&oldid=600607" இலிருந்து மீள்விக்கப்பட்டது