பக்கம்:பூநாகம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 141

ஆட்டோ ரிக்ஷா டோனா வளைவை நெருங்கிக் கொண் டிருந்தது. ஆக்ஸிலேட்டர் எழுபதைத் துரத்திக் கொண் டிருந்தது. அதிகமாக எவ்வளவு கொடுப்பாள் என்று டிரைவர் மனக்கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். குழந்தையைப் பார்க்கப் போகிறோம் என்ற இனிய எதிர்பார்ப்பும், எப்படி இருக்கிறதோ என்ற அச்ச உணர்வும் பின்னலிட, ராஜம் இருக்கையின் நுனியில் உட்கார்ந்து, இருப்புக் கொள்ளாமல் தவித்தாள்.

  • 岑 岑

பல்லவ பஸ், வேளாங்கண்ணி ஆலயத்திற்கருகே வந்து விட்டது. 'டயமாவுது, கட்டை, வண்டியை ஒட்டுகிற மாதிரி ஒட்டினா. எப்படி?’ என் லு கண்டக்டர் கத்தினார். டிரைவர் ஆக்ஸிலேட்டரை அழுத்தினார். என்ன, பொப்பு! எட்டு மணி நேரம் நாயா வேலை பார்த்தாலும் நல்லா சாப்பிட முடியுதா? பிள்ளிங்கள நல்ல ஸ்கூல்ல சேர்க்க முடியுதா போவட்டும். வீட்டுக்காரிக்கு ஒரு சேலை வாங்க முடியல. ஒன்னரை ரூபாய்ல எப்படி சமையல் பண்றது! உனக்கு மூளை இருக்கா??ன்னு கேட்டாளே ஒரு கேள்வி! கேட்கக் கூடிய கேள்வியா இது? கேட்டாளே- நாசமாப் போற பொழப்பு இந்த டிரைவர் வேலைக்கு. என்றைக்கு கும்புடு போடுறோமோ அன்னிக்குத்தான் குடும்பம் உருப்படும்!”

டிரைவரின் மன வேகத்திற்கும், அதன் குழப்பத்திற்கும் ஈடு கொடுக்கும் வகையில், அந்த பஸ், வேகமாகவும் அங்கு மிங்கும் ஆடிக் கொண்டும் ஓடியது.

率 ※ 宏

லாண்டரித் துணிகளைக் கொடுத்துவிட்டு, லாந்தர் விளக்குகளை போடுவதற்காக மேஸ்திரி கன்னையன் திரும்பி வந்தபோது, சிவப்புக் கொடி கட்டிய இடத்தில், ஒரு பெரிய கூட்டம் நின்று கொண்டிருந்ததைக் கண்டான். அந்த மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/150&oldid=600608" இலிருந்து மீள்விக்கப்பட்டது